பேச்சு:அணுவடித்துகள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நரசிம்மன், நல்ல கட்டுரையைத் தொடங்கியுள்ளீர்கள். துணை அணுத்துகள் என்பதைவிட அணுவகத்துகள் என்று நீங்கள் குறித்தபடியோ அணுவுட்துகள் என்றோ கூறலாம். அணுவடித்துகள் என்றும் கூறலாம். இவற்றை அடிப்படைத் துகள்கள் என்றும் கூறுவார்கள் அல்லவா, துகளியலில் (particle physics), ஆகவே அடித்துகள் என்றும் கூறலாம். என் தேர்வுகள் (வரிசைப்படி) அடித்துகள், அணுவுட்துகள், அணுவகத்துகள், அணுவடித்துகள். --செல்வா (பேச்சு) 14:41, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

  • ஐயா, எனக்கும் அப்படிச் சொல்லத்தான் அவா! கட்டுரைப்போட்டியின் தலைப்புகள் பட்டியலில் ‘துணைஅணுத்துகள்’ என்றே இருந்தபடியால் அதனையே கொண்டுவிட்டேன்... ஒரு வழிமாற்றி உருவாக்கிவிடுகிறேன். அணுவடித்துகள் என்பது பொருந்தும். கட்டுரையில் குறிப்பிட்டுள்ளதைப் போல சில அணுக்களைவிட பெரியதான சில துகள்களும் உள்ளன என்ற பொருளுக்கும் அது பொருந்தும்! --Narasimhavarman10 (பேச்சு) 14:47, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

மணம்[தொகு]

மணம் என்பது துகளியலில் குறிப்பிடத்தக்க ஒன்று என்று அறியாமல் திருத்தியதற்குப் பொறுத்துக் கொள்க. சரியாகத் திருத்தியமைக்குச் செல்வாவுக்கு நன்றி. --இரா. செல்வராசு (பேச்சு) 00:23, 28 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அணுவடித்துகள்&oldid=1531871" இலிருந்து மீள்விக்கப்பட்டது