பேச்சு:அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"அணுக்கருப் பரவாமை" என்பது சரியான பொருள் தருவதாகத் தெரியவில்லை. ஏனென்றால் இவ்வொப்பந்தம் அணுக்கருவைப் பரவாமல் செய்வதற்கு ஆனது அல்ல. உண்மையில் அணு ஆயுதங்களைப் பரவாமல் செய்வதற்கானது. பொதுவாகப் பத்திரிகைகளில் இதனை "அணுவாயுதப் பரவல்தடுப்பு ஒப்பந்தம்" என்றுதான் குறிப்பிடுவது வழக்கம். -- மயூரநாதன் 08:03, 28 ஆகஸ்ட் 2010 (UTC)

இதனை நானும் அணுவாயுதப் பரவாமை ஒப்பந்தம் என்றே முதலில் தலைப்பிட எண்ணியிருந்தேன். இருப்பினும் அணுக்கருவியல் பக்கத்தினைப் பார்த்து nuclear என்பதற்கு அணுக்கரு என்பது சரியானதாக இருக்கும் என எண்ணினேன்.தவிர,இந்த ஒப்பந்தம் அணுவாயுதங்களைப் பற்றி மட்டுமல்லாது அணுக்கருவியல் மற்றும் எரிபொருள் பயன்பாட்டையும் உள்ளடக்கியுள்ளது.ஆங்கிலத்தில் Nuclear weapons என்று வரவில்லை.Non Proliferationக்கு பரவாமை (proliferation - பரவல்;எதிர்மறை பரவாமை)சரியே என்று நினைக்கிறேன். பரவல் தடுப்பு என்பது விளக்கமாக இருப்பினும் சுருக்கமானே பரவாமையே போதுமானது என நினைக்கிறேன்.பிறர் கருத்துக்களையும் அறிந்து தலைப்பை மாற்றலாம்.--மணியன் 15:22, 28 ஆகஸ்ட் 2010 (UTC)
மணியன் சொல்வதுபோல ஆயுதங்கள் மட்டுமல்ல - fuel, technology என சகலத்தையும் பரவாமல் தடுக்க நினைக்கிறது. எனவே பொதுப்படையாக ”அணுக்கரு” என்பது சரிதான் என எனக்குப் படுகிறது.--சோடாபாட்டில் 15:37, 28 ஆகஸ்ட் 2010 (UTC)

"அணுக்கரு பரவாமை" என்பது பொருத்தமானது அல்ல. அணுக்கரு, அணுக்கள் உள்ள இடம் எங்கும் இருப்பது அதனைப் பரவாமல் செய்ய முடியாது. அணுக்கரு என்பது "nucleus". "nuclear" ஒரு பெயரடை. இதனால் "Nuclear Nonproliferation" என்னும்போது அது "அணுக்கரு சார்ந்த" விடயங்களைப் பரவாமல் தடுப்பது என்ற பொருள்தான் வருகிறது. தமிழில் "அணுக்கருப் பரவாமை எனும்போது" அந்தப்பொருள் வரவில்லை.

ஆங்கில விக்கிக் கட்டுரையில் இதற்குத் தரப்பட்டுள்ள விளக்கம் தெளிவானது. அதைக் கீழே பாருங்கள். அணுக்கருத் தொழில் நுட்பமும் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் அது குறிப்பது ஆயுதத் தயாரிப்புக்கான தொழில் நுட்பத்தை மட்டும்தான்.

Nuclear proliferation is a term now used to describe the spread of nuclear weapons, fissile material, and weapons-applicable nuclear technology and information, to nations which are not recognized as "Nuclear Weapon States"

உங்கள் மொழி பெயர்ப்பும் அதைத்தானே சொல்கிறது. (கீழே பார்க்கவும்)

"அணுக்கருப் பரவாமை ஒப்பந்தம் (Nuclear Non-Proliferation Treaty) அல்லது(NNPT) அல்லது அணுவாயுதப் பரவல்தடுப்பு ஒப்பந்தம், அணுக்கரு ஆயுதங்கள் உருவாவதை தடுக்கும்பொருட்டு ஏற்படுத்தப்பட்ட ஓர் ஒப்பந்தமாகும்."

அத்துடன் இந்த ஒப்பந்தம் ஆயுதத் தேவைகள் தவிர்ந்த தேவைகளுக்கு அணுக்கருத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதற்கான உரிமையை உறுதிசெய்வதையும் பாருங்கள்:

"the treaty is nevertheless sometimes interpreted as a three-pillar system, with an implicit balance among them:
non-proliferation,
disarmament, and
the right to peacefully use nuclear technology". (ஆங்கில விக்கிக் கட்டுரை)

தவிர, Nonproliferation என்பதற்குப் பொருள் "பரவாமை" அல்ல. மெரியம் வெப்ஸ்டர் அகரமுதலி தரும் விளக்கத்தைக் கீழே பாருங்கள்

Definition of NONPROLIFERATION

providing for the stoppage of proliferation (as of nuclear arms) <nonproliferation treaty>

இதன்படி "nonproliferation" என்பது பரவலைத் தடுத்தல் என்பதுதான். எனவே "அணுக்கருப் பரவாமை ஒப்பந்தம்" என்பது பிழை என்பதுதான் எனது கருத்து. -- மயூரநாதன் 18:48, 28 ஆகஸ்ட் 2010 (UTC)

மயூரநாதன், உங்கள் கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடு இருந்தபோதிலும் nuclear என்ற சொல்லுக்கு அணுக்கரு என்ற சொல்லே பொருத்தமானதாகக் கருதுகிறேன்.அணு என்பது atom ஆகும்.atomic bomb என்பதிலிருந்து அணு என்ற சொல் தமிழ் ஊடகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஐதரசன் குண்டிலிருந்து மாறுபட்டு இன்று அணுக்கரு (புரோட்டான்) குண்டுகள் செயலாக்கத்திற்கு வந்தபின்னும் அணு என்ற சொல்லே புழக்கத்தில் உள்ளது. எனவே நான் முன்பே குறிப்பிட்டிருந்த அணுக்கருவியல் பக்கத்தில் கண்டுள்ளதுபோல ஒரே சீராக nuclear என்பதற்கு அணுக்கரு என்ற சொல்லாக்கம் சிறப்பாக இருக்கும் எனக் கருதினேன்.

மேலே கண்ட உரையாடலை அடுத்து தலைப்பை அணுக்கரு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தம் அல்லது அணுக்கரு ஆயுதப் பரவல்தடை ஒப்பந்தம் என மாற்றலாம்.--மணியன் 01:42, 1 செப்டெம்பர் 2010 (UTC)[பதிலளி]