பேச்சு:அக்சோப்ய புத்தர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்சோப்ய புத்தர் பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கட்டுரையைத் தமிழில் பெயரிடுக=[தொகு]

இந்தக் கட்டுரைத் தலைப்பில் உள்ள கிரந்த (?) எழுத்து தமிழில் இல்லாதது மட்டுமல்ல ஈழத்து இளந் தலைமுறையினருக்கு அறிமுகமாகாதது. இதனை எவ்வாறு வாசிப்பதென்பதே எனக்குத் தெரியாது இதனை மாற்றி அனைவரும் வாசிக்கக் கூடிய தலைப்பாக்கப் பரிந்துரைக்கிறேன். கோபி 01:24, 28 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

க்+ஷா என்று எழுதினால் க்ஷா என்று ஒருங்குறி தானாக மாற்றிக் கொள்கிறது. இதன் ஒலிப்பு kshaa. இந்த எழுத்து தமிழ்நாட்டுப் பொதுவழக்கில் கிட்டத்தட்ட ஒழிந்து விட்டது என்றே சொல்லலாம். ரிக்+ஷா என்று தனித்தனி எழுத்துக்களாக பிரித்தே எழுதுகிறார்கள். ஒரு குறிப்புக்கு, புதிய நெடுங்கணக்கு எழுதிப் பார்க்கலாம் :) க்ஷ, க்ஷா, க்ஷி, க்ஷீ, க்ஷு, க்ஷூ, க்ஷெ... ஆ..இதற்கு மேல் தட்டச்சு செய்ய தடுமாற்றமாய் இருக்கிறது..கை வலிக்கிறது :) தவிர, இந்த எழுத்தை எல்லாம் பார்ப்பது வினோதமாகவும் பயமாகவும் இருக்கிறது. இந்தக் கூட்டெழுத்துக்கள் வரும் இடங்களில் ஷ-க்குப் பதில் ச பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறேன்--ரவி 02:54, 28 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

யூனிகோடில் க்+ஷ் --> க்ஷ் என தானாக மாறினால் என்ன செய்வது? என் தேர்வு நிறைவாகும் வரை தயவு செய்து பொறுக்கவும். பிறகு ஒரு பொருத்தமான தலைப்பை மாற்றுகிறேன். வினோத் 03:51, 28 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

அக்சோபய புத்தர் அல்லது அச்சோபய புத்தர் அல்லது அட்சோபய புத்தர் எனப் பெயரிடலாம். இதே தொடர்பில், மோட்சம் என்பது பரவலாக ஆளும் எழுத்துக் கூட்டல், அதை விடுத்து மோக்ஷம் என்பது தேவையில்லாதது. மோட்சம் என்பதை முத்தி, முக்தி என்றும் எழுதுவார்கள். அளவிறந்து கிரந்த எழுத்துக்கள் சேர்த்து எழுதுவதால் தமிழ் படிக்கும் உணர்வே அற்றுவிடுகின்றது. தமிழின் இனிமை, தன்னியல்பு மிகப்பெரிதும் கெடுகின்றது. மஞ்சுசிரீ, அச்சோபய/அட்சோபய புத்தர், என்று எழுதுவது பொருத்தமாக இருக்கும். பெரும்பாலான தமிழர்கள் எளிதாக படிக்கவும் ஏற்றுக்கொள்ளவும் உதவியாக இருக்கும். தமிழியல்புடன் ஒத்து இருப்பதுதான் நல்லது. --செல்வா 05:24, 28 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

கூட்டெழுத்து வராமல் இருக்க ZWNJ பயன்படுத்தியுள்ளேன். பிரச்சினை தீர்ந்தது என நினைக்கிறேன் வினோத் 15:45, 29 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

அது என்ன zwnj technique? விளக்கினால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி--ரவி 17:36, 29 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

யூனிகோடில் பல எழுத்துக்கள் இவ்வாறு உள்ளன அவற்றை கட்டுப்பாட்டு எழுத்துக்கள்(Control Characters...எப்படி என்னோட மொழிபெயர்ப்பு. உங்களோட சேர்ந்து நானும் கெட்டுபோய்ட்டேன்!!!!). என்பர். இவற்றுல் பலவகை உள்ளன, அதில் ஒன்று தான் இந்த ZWNJ(Zero Width Non-Joiner). இதை எழுத்துக்களுக்கு நடுவில் பயன்படுத்துவதால் கூட்டெழுத்து உருவாவது தடுக்கப்படுகிறது.(தமிழுக்கு நான் எழுதிய கீமேன் விசைப்பலகையில் எதற்காவது பயன்படும் என்று சேர்த்தது இன்று பயன்பட்டது). இன்னும் யூனிகோடில் நிறைய உள்ளன கூட்டெழுத்து உருவாக்க ZWJ(Zero Width Joiner), இன்னும் Zero Width Space என ஏகப்பட்டது உள்ளன. வினோத் 17:45, 29 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

வினோத், உங்கள் விசைப்பலகையை பொதுப் பயன்பாட்டுக்கு விட இயலுமா? வேறு என்ன மேம்பாடுகள் உண்டு? எ-கலப்பையில் இருந்து எப்படி வேறுபட்டிருக்கிறது?--ரவி 19:20, 29 நவம்பர் 2007 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அக்சோப்ய_புத்தர்&oldid=1125190" இலிருந்து மீள்விக்கப்பட்டது