பெரும் புகைமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரும் புகை மலை
ஏப்ரல் 2007இல் எடுக்கப்பட்ட ஒளிப்படம்; லெ கொண்ட் மலையின் மேலிருந்து காணும் காட்சி
உயர்ந்த இடம்
உச்சிகிளிங்மேன்சு டோம்
உயரம்6,643 அடி (2,025 m)
புவியியல்
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Appalachian map.svg" does not exist.
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு
மாநிலங்கள்வட கரொலைனா and டென்னிசி
மூலத் தொடர்நீல முகடு மலை
எல்லைகள்வழுக்கை மலை, வெண்புகை மலை, பிளாட் பால்சம்சு
நிலவியல்
மலை பிறப்புAlleghenian

பெரும் புகைமலை (Great Smoky Mountains) தென்கிழக்கு ஐக்கிய அமெரிக்காவின் டென்னிசிவட கரொலைனா எல்லையில் அமைந்துள்ள மலைத் தொடர் ஆகும். இவை ஆப்பலேச்சிய மலைத்தொடரின் உட்பிரிவாகும். இந்த மலைத் தொடர் சில நேரங்களில் புகை மலை என்றும் பரவலாக இசுமோக்கீசு என்றும் குறிப்பிடப்படுகின்றது. இங்கு பெரும் புகைமலை தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இந்தப் பூங்கா 1934இல் நிறுவப்பட்டது. ஆண்டுக்கு 9 மில்லியன் வருகையாளர்களைக் கவரும் இந்தப் பூங்கா ஐக்கிய அமெரிக்காவில் மிகவும் பார்க்கப்படும் பூங்காவாக விளங்குகின்றது.[1]

இம்மலைத்தொடர் பன்னாட்டு உயிர்க்கோளக் காப்பகத்தின் அங்கமாகும். இங்கு 187,000 ஏக்கர்கள் (76,000 ha) பரப்பில் தொன்மையான காடுகள் உள்ளன; மிசிசிப்பி ஆற்றுக்கு கிழக்கில் இத்தகைய பெரும்பரப்பிலுள்ள தொன்மைக் காடாக விளங்குகின்றது.[2] அப்பலேச்சிய மலைத் தொடரின் இரு மலைத்தொடரிடை பள்ளத்தாக்கில், இம்மலைத் தொடரின் குறைந்த உயரங்களில் உள்ள வன்மரக் காடுகள் வட அமெரிக்காவில் மிகப்பெரிய பல்வகைமை சூழல்தொகுதிகளாகும். அதேபோல இம்மலைத்தொடரின் உயர்ந்த பகுதிகளில் காணப்படும் ஊசியிலை வகைக் காடுகளும் இங்குதான் பெருமளவில் உள்ளன. [3] கிழக்கு ஐக்கிய அமெரிக்காவின் பெரும்பான்மையான கருங்கரடிகள் இங்குள்ளன; அயனமண்டலத்தை அடுத்து பல்வகையான சாலமாண்டர் இனங்களையும் இங்கு காணலாம்.[4]

பெரும் புகைமலையை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளது. ஐக்கிய அமெரிக்க தேசியப் பூங்காத் துறை இங்கு வாழ்ந்திருந்த ஆப்பலேச்சிய இனங்களின் 78 கட்டமைப்புக்களை பராமரித்து வருகின்றது.

இந்த மலைத்தொடரின் மீது எப்போதும் காணப்படும் இயற்கையான மூடுபனியாலும் தொலைவிலிருந்து காண்கையில் புகை எழும்புவது போலிருப்பதாலும் இதனை புகை போன்ற எனப் பொருள்பட "இசுமோக்கி" என ஆங்கிலத்தில் அழைக்கலாயினர். இந்த மூடுபனி தாவரங்கள் வெளியிடும் ஆவியாகும் கரிமச் சேர்வை வேதிப் பொருட்களின் மீயுயர் ஆவி அழுத்தத்தால் ஏற்படுகின்றது. [5]

மேற்சான்றுகள்[தொகு]

  1. "National Park Service". Nps.gov. 2012-11-06. பார்க்கப்பட்ட நாள் 2013-01-02.
  2. Rose Houk, Great Smoky Mountains National Park: A Natural History Guide (Boston: Houghton Mifflin, 1993), 198.
  3. Houk, 50.
  4. Houk, 112, 119.
  5. Laura Naranjo, "Volatile Trees," NASA.gov, 20 November 2011. Retrieved: 24 June 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரும்_புகைமலை&oldid=2059457" இலிருந்து மீள்விக்கப்பட்டது