பெருமுழுநிலவு
பெருமுழுநிலவு (சூப்பர்மூன், Supermoon) என்பது ‘நிலவிற்கும் பூமிக்கும் இடையேயான தொலைவு சராசரியாக உள்ளதைவிட சற்று குறைவாகவும் முழுநிலவு கூடிய தினமாகவும் இருக்கும் நிகழ்வாகும்’ என்று நாசாவின் மூத்த அறிவியலாளர் ஜேம்சு கார்வின் வரையறுக்கிறார் [1] மார்ச் 19, 2011 அன்று பூமிக்கு 356,577 கிலோமீட்டர்கள் (2 இலட்சத்து 21 ஆயிரத்து 556 மைல்கள்) தொலைவில் நிலவு இருக்கும். சராசரியாக நிலவிற்கும் பூமிக்குமான அண்மைநிலைத் தொலைவு (lunar perigee) 364,397 கிலோமீட்டர்கள் ( 2 இலட்சத்து 26 ஆயிரத்து 425 மைல்கள்) ஆகும். கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிலவு பூமிக்கு அருகில் வருகிறது. இச்சிறு மாற்றத்தைக் கண்டிட லேசர் தொலைவுகாட்டிகளால் (laser rangefinder) மட்டுமே இயலும். இருப்பினும், இயல்பாக இருப்பதைவிட முழுநிலவு சற்று பெரியதாகவும் பொலிவு அதிகரித்தும் காணப்படும். இதற்கு முன் 1955, 1974, 1992 மற்றும் 2005-ம் ஆண்டுகளில் இந்த சூப்பர்மூன் நிகழ்வு ஏற்பட்டுள்ளது.
பொருளடக்கம் |
வானியல் நிகழ்வு [தொகு]
பெருமுழுநிலவு என்பது ஒரு வானியல் நிகழ்வு மட்டுமே; இதனால் புவியில் நிலநடுக்கங்களோ, சுனாமிக்களோ தூண்டப்படுவது கிடையாது என்று நிலநடுக்கவியலாரும் எரிமலையியலாரும் கூறுகின்றனர் [2]. நிலவு புவிக்கு அண்மைநிலையில் இருத்தலும் கூடுதலாக முழுநிலவுப் பிறையில் நிலவு இருத்தலும் புவியின் அக ஆற்றலில் எவ்வித பெருமாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை. பெருமுழுநிலவன்று ஏற்படக்கூடிய மதிப்பெருக்கும் (lunar tide) கூட வழமையாக ஒவ்வொரு முழுநிலவின் (பெளர்ணமி) பொழுதும் ஏற்படுவதை விட சற்றே அதிகமாக இருக்கும். நிலவின் (மற்றும் சூரியனின்) பரலை விசைகள் (tidal forces) எப்போதுமே புவிமேலோட்டுப் பேரியக்க விசைகளை (tectonic forces) விட மிகமிகக் குறைவாகவே உள்ளதால், நிலநடுக்கங்களோ அதனால் விளையக்கூடிய ஆழிப்பேரலைகளோ சாத்தியமில்லை.
அளவில் காணப்படும் மாற்றங்கள் [தொகு]
சராசரியாகவுள்ள புவி-நிலவு அண்மைநிலைத் தொலைவுடன் (364,397 கிலோமீட்டர்கள்) பெரியமுழுநிலவன்று இருக்கும் அண்மைநிலைத் தொலைவை (356,577 கி.மீ) ஒப்பிட்டால் நிலவின் தோற்றம் ஏறத்தாழ 2.15 % பெரிதாகத் தோன்றும். படத்தில் காட்டப்பட்டுள்ள அண்மைநிலைத் தொலைவுடன் (356700 கி.மீ) முழுநிலவின் சேய்மைநிலைத் தொலைவை (406300 கி.மீ) ஒப்பிட்டால் ஏறத்தாழ 12 % சிறியதாகக் காட்சியளிப்பது கண்கூடு.
2012இல் பெருமுழுநிலவு [தொகு]
2012ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் நாள் இரவு 11:34 மணிக்கு (அமெரிக்காவின் கிழக்குப் பிரதேச நேரம் - EST; பொது நேரம் - UT: மே 6, காலை 4:34) பெரு முழுநிலவு நியூயார்க் வானில் தோன்றி எழிலுடன் ஒளிர்ந்தது.