பெரிய புராணம் - ஓர் ஆய்வு, தொகுதி 2 (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிய புராணம் ஓர் ஆய்வு நூலின் அட்டைப்படம்
நூல் பெயர்:பெரிய புராணம் ஓர் ஆய்வு நூலின் அட்டைப்படம்
ஆசிரியர்(கள்):அ. ச. ஞானசம்பந்தன்
வகை:ஆய்வு, சைவ சமயம்
காலம்:மார்ச் 1999
மொழி:தமிழ்
பக்கங்கள்:352 - 793
பதிப்பகர்:கங்கை புத்தக நிலையம்
பிற குறிப்புகள்:முந்தையது பெரிய புராணம் ஓர் ஆய்வு தொகுதி 1

பெரிய புராணம் ஓர் ஆய்வு பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் அவர்களால் எழுதப்பட்ட ஆய்வு நூலாகும். இந்நூலில் சேக்கிழார் சைவ சமய அடியார்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய பெரியபுராணம் எனும் நூலினை ஆய்வு செய்து எழுதியுள்ளார். இதன் முதல் தொகுதி பெரிய புராணம் ஓர் ஆய்வு தொகுதி 1 எனும் பெயரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூலை சென்னை தியாகராய நகரில் இயங்கிய கங்கை புத்தக நிலையம் வெளியிட்டுள்ளது. தஞ்சைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரான முது முனைவர் வ.அய்.சுப்பிரமணியம் அவர்களின் வேண்டுகோளை ஏற்று பெரியபுராணம் பற்றிய ஆய்வை மேற்கொண்டதாக ஞானசம்பந்தன் அவர்கள் அறிமுக உரையில் கூறுகின்றார்.

இந்நூலில் பெரியபுராணம் காப்பியம் எனும் நோக்கில் ஞானசம்பந்தன் ஆய்வு மேற்கொண்டுள்ளதாக ம. ரா. போ. குருசாமி தெரிவித்துள்ளார்.

உள்ளடக்கங்கள்[தொகு]

  1. தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
  2. சேக்கிழார் வகுத்த காப்பிய நெறி
  3. பெரியபுராண மூலங்கள்
  4. தமிழர் கண்ட இறையன்பு
  5. பெரியபுராண அமைப்பு
  6. ஒன்பதாவது சுவை
  7. பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை
  8. கொள்கைப் போராட்டம்
  9. வழிநூலும் விரிநூலும்
  10. புலமை நயம்

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]