பெரண்டி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரண்டி கோயில் (Berendi Kovil or Berendi Temple) என்பது இலங்கை, மேல் மாகாணத்தில், அவிசாவளை நகரிலிருந்து கிட்டத்தட்ட 3 கி.மீ. தொலைவில் தலுதுவ எனும் கிராமத்தில் இடிபாடுகளுடன் காணப்படும் 500 ஆண்டுகள் பழமையான ஒரு இந்து கோயிலாகும் [1][2] இந்தக் கோயில் சீதாவக்கை அரசு நிலவிய காலத்தில், சீதாவக்கை ஆற்றின் அருகாமையில் முதலாம் இராஜசிங்கன் மன்னனால் கட்டுவிக்கப்பட்டது என "அசிரிமத் சீதாவக்க" எனும் சிங்கள நூல் கூறுகிறது. அத்துடன் இக்கோயில் இலங்கையின் தொல்லியல் ஆய்வுகளுக்கு உட்பட்ட ஒரு தொல்லியல் களமுமாக விளங்குகிறது. இலங்கையின் வரலாற்றாசிரியரும் தொல்பொருள் ஆய்வாளருமான கா. இந்திரபாலா அவர்கள் இலங்கையில் பௌத்தம் வேரூண்டியப் போதும் சிங்களவரிடம் சைவ சமயச் செல்வாக்கும் காணப்பட்டன என்றும், பதினாராம் நூற்றாண்டில் அது உச்சநிலையில் அரச அரண்மனை வரை செல்வாக்குடன் காணப்பட்டது என்றும், அதன் பின்னனியிலேயே சீதாவக்கை அரசின் மன்னனான முதலாம் இராஜசிங்கன் தனது பாரம்பரிய சமயமான பௌத்தத்தை விட்டு சைவ சமயத்தை தழுவியதுடன், ஒரு அழகிய கோயிலை கட்ட ஆடம்பித்தான் என்றும், அது கட்டுமாணப் பணி நிறைவுறாத நிலையில், பெரண்டி கோயில் எனும் பெயரில் காணப்படுகிறது என்றும் தனது ஆதி இலங்கையில் இந்துமதம் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.[3] அத்துடன் இக்கோயில் விஜயநகரக் கட்டிடக்கலையின் பாணியைச் சேர்ந்தது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.

வரலாறு[தொகு]

சீதாவக்கை அரசு எனும் அரசை மாயாதுன்னை எனும் மன்னனின் ஆட்சி நிலவிய காலத்தில், மன்னனின் மகனான முதலாம் இராஜசிங்கன் தனது தந்தையைக் கொன்று அரியணையேறினான். அதன் பாவத்தில் இருந்து விடுபடும் நோக்கில் சைவ சமயத்தை தழுவியதுடன், அரிட்டகி பெருமாள் எனும் குருக்களின் ஆலோசனைக்கிணங்க சைவக் கடவுளாகிய சிவனின் ஒரு வடிவமான வைரவர் கோயில் ஒன்றை இருந்து கி.பி. 1582இல் கட்டுவித்தான். பின்னர் சீதாவக்கை அரசு போத்துகீசரின் ஆளுகைக்கு உட்பட்ட வேளையில் இக்கோயில் பலமுறை தாக்குதலுக்கு உள்ளாகியது என்பது தொல்பொருள் ஆய்வாளர் எச். சி. பி. பெல் என்பவரின் கருத்தாகும்.[4]

பெரெண்டி காரணப் பெயர்[தொகு]

வைரவரை சிங்களவர் "பைரவயா" அல்லது "பைரவ தெய்யா" என அழைக்கும் வழக்கு உள்ளது. என்றாலும் "பெரண்டி" என்பதற்கான சிங்கள விளக்கமோ, பெயர் காரணமோ சரியாக அறியப்படவில்லை. இருப்பினும் "பைரவயா" எனும் பெயரே காலப்போக்கில் மருவி "பெரண்டி" என திரிபடைந்திருக்கலாம் எனும் ஒரு கூற்று உள்ளது.[5] தமிழில் கோயில் எனும் சொல் பேச்சு வழக்கில் கோவில் என்றும் அழைக்கப்படுவது வழமை; அவ்வழமைக்கு அமைவாகவே "பெர்ண்டி கோவில்" என்பதில் வரும் "கோவில்" எனும் பெயர் சிங்களவரிடமும் நிலைத்துள்ளது.

அமைவிடம்[தொகு]

கொழும்பில் இருந்து அட்டன், நுவரெலியா செல்லும் வழியில் கிட்டத்தட்ட 60 கி.மீ. தொலைவில், அவிசாவளை நகரில் இருந்து பிரிந்து தலுதுவ எனும் ஊருக்குச் செல்லும் பாதையில் 3 கி.மீ. தொலைவில் இக்கோயில் இடிபாடுகளுடன் காணப்படுகிறது.[6]

சான்றுகோள்கள்[தொகு]

  1. http://www.srilankatravelnotes.com/KEGALLE/BERENDIKOVIL/BerendiKovil.html
  2. BERENDI KOVIL & SITAWAKA RIVER, AVISSAWELA
  3. ஆதி இலங்கையில் இந்துமதம் நூல்)
  4. "පෘතුගීසීන් විසින් කිහිප අවස්ථාවකදීම මෙය විනාශ කරන ලදී. අද ඇත්තේ 1595 දී පුරාවිද්‍යා කොමසාරිස්ව සිටි එච්. සී. පී. බෙල්". Archived from the original on 2010-08-09. பார்க்கப்பட்ட நாள் 2012-10-27.
  5. http://www.youtube.com/watch?feature=player_embedded&v=LadINfJ6iZs
  6. http://www.explorelanka.com/places/sab/kitulgala.htm

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரண்டி_கோயில்&oldid=3564858" இலிருந்து மீள்விக்கப்பட்டது