பெற்றோல் பொறி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பெட்ரோல் எஞ்சின் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பெற்றோல் பொறி என்பது ஒரு உள் எரி பொறி இயந்திரம் ஆகும். பெரும்பாலும் சிறுரக வாகனங்களில் இது பொருத்தப்படுகிறது. இது பெட்ரோல், காற்று கலந்த கலவையை கார்புரேட்டர் வழியாகச் சிலிண்டருக்குள் இழுத்து பிஸ்டனினால் அழுத்தம் அடையச்செய்து ஸ்பார்க் பிளக் உதவியினால் கலவையை எரித்து, வெப்ப ஆற்றலை ஏற்படுத்தி, அந்த ஆற்றலை வாகனம் உருளுவதற்குத் தேவையான இயந்திர ஆற்றலாக மாற்றித் தருகிறது.
