பெட்டக் குறும்பர் மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெட்டக் குறும்பர் மொழி
 நாடுகள்: இந்தியா 
பகுதி: தமிழ்நாடு நீலகிரி மாவட்டம்; கர்நாடகத்தின் மைசூர் மவட்டம்; கேரளா வயநாடு மாவட்டம்.
 பேசுபவர்கள்: 32,000 (2003)
மொழிக் குடும்பம்: திராவிடம்
 தென் திராவிடம்
  தமிழ்-கன்னடம்
   தமிழ்-குடகு
    தமிழ்-மலையாளம்
     தமிழ்
      பெட்டக் குறும்பர் மொழி
மொழிக் குறியீடுகள்
ஐ.எசு.ஓ 639-1: இல்லை
ஐ.எசு.ஓ 639-2:
ISO/FDIS 639-3: xub 


பெட்டக் குறும்பர் மொழி தமிழ்-கன்னடப் பிரிவைச் சேர்ந்த ஒரு தென் திராவிட மொழியாகும். இந்தியாவில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாழ 32,000 மக்களால் பேசப்படுகிறது. பெட்ட குறும்பர் இன மக்கள் இம்மொழியைப் பேசுகின்றனர். இது காட்டுக் குறும்பா, ஊராலிக் குறும்பா, போன்ற பெயர்களிலும் அழைக்கப்படுவது உண்டு. பெட்டாக் குறும்பா என்பது மலை இடையர் எனப் பொருள்படும். பெட்டா எனில் இம்மொழியில் மலை என்று பொருள். (ஒப்புநோக்கு: தொட்டபெட்டா)

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]