பூலோகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பூலோகம் என்பது இந்து தொன்மவியல் அடிப்படையில் பிரம்மாண்டத்தில் உள்ள பதினான்கு உலகங்களில் ஒன்றாகும். இந்த பூலோகம் என்பது பூமியை குறிப்பிடும் இந்து தொன்மவியல் சொல்லாகும். இது பூமியை மட்டுமல்லாத சூரியகுடும்பம் முழுவதையும் குறிப்பதாகவும் கூறுவர். பூலோகமானது சுவர்க்கலோகத்தின் கீழும் பாதளலோகத்தின் மேலும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பூலோக கடவுள்[தொகு]

சத்திய லோகம் எனும் உலகில் பிரம்மாவும், வைகுண்டம் எனும் உலகில் திருமாலும், கோலோகத்தில் கிருஷ்ணனும் வாழ்வதாக கூறும் புராணங்கள், சைவர்களின் முழுமுதற்கடவுளான சிவபெருமான் மட்டுமே பூலோகத்தில் உள்ள கைலாயத்தில் வாழ்வதாக கூறுகின்றன.[1] அதனால் சிவபெருமான் பூலோக கடவுள் என்று அறியப்படுகிறார்.

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்களும் மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=13623 பரணிடப்பட்டது 2012-08-03 at the வந்தவழி இயந்திரம் யுக யுகமாய் அவதரித்த ராகவேந்திரர்

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூலோகம்&oldid=3222289" இலிருந்து மீள்விக்கப்பட்டது