புர்ஜ் கலிஃபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பூர்ஜ் துபாய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புர்ஜ் கலிஃபா
Burj khalifa
Burjdubaiaug92007.jpg

புர்ஜ் கலிஃபா என்னும் கலிஃபா கோபுரம்.


தகவல்
அமைவிடம் துபாய், ஐக்கிய அரபு அமீரகம்
நிலை Topped-out
தொடக்கம் 21 செப்டம்பர் 2004
Estimated completion 2009[1]
திறப்பு 4 சனவரி 2010[2]
பயன்பாடு பலவித பயன்பாடு
உயரம்
Antenna/Spire 818 மீ (2,684 அடி)[1]
தொழில்நுட்ப விபரங்கள்
தள எண்ணிக்கை 160 வசிக்கக்கூடிய மாடிகள்[3]
தளப் பரப்பு 334,000 மீ2 (3,595,100 சதுர அடி)
நிறுவனங்கள்
கட்டிடக்கலைஞர் ஸ்கிட்மோர், ஓவிங்ஸ் மற்றும் மெரில்
அமைப்புப்
பொறியாளர்
பில் பேக்கர்[4]
Developer எமார்
புர்ஜ் கலிஃபா கட்டுமானம்

புர்ஜ் கலிஃபா (அரபு மொழி: برج خليفة என்னும் கலிஃபா கோபுரம்) தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு வானளாவியைக் (skyscraper) குறிக்கும். உலகின் உயரமான கட்டிடம் என்ற பெயரைப்பெறும் நோக்கத்துடன் கட்டப்படும் இக் கட்டிடத்தின் உயரம் 818 மீ (2,684 அடி). இதன் கட்டுமானப் பணிகள் 2004, செப்டம்பர் 21 இல் ஆரம்பிக்கப்பட்டது. 2010, சனவரி 4 ஆம் நாள் இது திறந்து வைக்கப்படவிருக்கிறது[1][2].

இக்கட்டிடத்தைக் கட்டும் ஒப்பந்த நிறுவனத்தின் கணக்கொன்றின்படி இதன் உயரம், 818 மீட்டர் (2684 அடி) அளவுக்கு இருக்கக்கூடுமென நம்பப்படுகிறது. இதன்படி இதில் அமையும் மாடிகளின் எண்ணிக்கை 162 வரை இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது. எனினும், இத்திட்டத்துக்கான அதிகாரபூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள படமொன்றில் காணப்படும் உயர்த்தியொன்றில் 195 எண்ணிக்கைகள் வரையில் குறிப்பிடப்பட்டிருப்பது தெரிகிறது. அண்மைக்காலக் கட்டுரையொன்றில், துணை ஒப்பந்த நிறுவனம் ஒன்று பேர்சியன் கல்ஃப் எக்ஸ்ட்றூஷன்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இதன் இறுதி உயரம் 940 மீட்டராக (3084 அடி) இருக்கும் எனத் தெரிகிறது.

இதன் தலைமைக் கட்டிடக்கலைஞர், ஸ்கிட்மோர் ஆவிங்ஸ் ஆன் மெரில்ஸ் என்னும் கட்டிடக்கலை நிறுவனத்தின் சிக்காகோ அலுவலகத்தைச் சேர்ந்த ஆட்ரியான் சிமித் என்பவராவார். எனினும் இது கட்டிடத்தின் உரிமையாளர்களான "இமார்" நிறுவனத்தினால் உறுதிசெய்யப்படவில்லை.

இக்கட்டிடம் திறக்கப்படுவதற்கு கடைசிநிமிடம் வரை புர்ஜ் துபை என்றே அனைவராலும் அழைக்கப்பெற்றது. துபை வேர்ல்ட்ன் கடன்சுமையை அபுதாபி கலிஃபா 10 பில்லியன் அளவில் பைல்அவுட் செய்ததன் நன்றிக்கடனாக இப்பெயர் சூட்டப்பெற்றதாக பரவலாக பேசப்பட்டது.

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 "Burj Dubai, Dubai, at Emporis.com". Emporis. பார்த்த நாள் 1 March 2007.
  2. 2.0 2.1 "Official Opening of Iconic Burj Dubai Announced", 'Gulfnews', 4 November 2009. 4 November 2009 அன்று தகவல் பெறப்பட்டது. 
  3. No more habitable floors to Burj Dubai, XPRESS (newspaper)
  4. Blum, Andrew (27 November 2007). "Engineer Bill Baker Is the King of Superstable 150-Story Structures". Wired. பார்த்த நாள் 11 March 2008.

[தொகு] வெளியிணைப்புகள்

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
ஏனைய மொழிகள்