பூமியில் இடத்தைக் காட்டும் கருவி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பூமியில் இடத்தைக் காட்டும் கருவி (Global Positing System) (ஜிபிஎஸ்)ஆனது செய்மதியூடான (செயற்கைக்கோள் வழியாக) வழிகாட்டல் முறையாகும். இதில் 24 இற்கு மேற்பட்ட அமெரிக்க செய்மதிகள் பூமிக்கு இடத்தின் நிலைகளை மின்காந்த அலைவீச்சாக வழங்கிக் கொண்டிருக்கும். இந்த இலவச அலைவீச்சுக் குறிப்புகளைப் பெற்று அதிலிருந்து பூமியின் இடத்தைக்காட்டுவதுதான் பூமியில் இடம் காட்டும் கருவி அகும். தூரயா போன்ற கருவிகளில் இது காணப்பட்டாலும் இதன் துல்லியத்தன்மையானது இதற்கெனத் தயாரிக்கப் பட்ட கருவிகளிலும் குறைவானதாகும்.
ஜிபிஎஸ் (GPS) ஆனது இன்று வான், கடல், தரைப் பயணங்களிற்கு இன்றியமையாத கருவியாக விளங்குகின்றது. இது நாடுகளின் படங்களை உருவாக்குவதிலும். மற்றும் நில அமைப்பு, நில அளவைகளை மேற்கொள்வதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது.
பொருளடக்கம் |
[தொகு] பயன்பாடுகள்
[தொகு] பயணங்கள்
ஜிபிஎஸ் உதவியுடன் பாதை தவறாத பயணங்களை மேற்கொள்ள முடிகின்றது. மலிவான ஜிபிஎஸ் மடிக்கணினிகளுடனோ அல்லது கைத்தரவு (PDA) உடனோ தொடர்பாடி இடங்களை உடனுக்குடன் வழங்கி வருகின்றது.
[தொகு] நில அளவை
மிக விலை கூடியதும் மிகத் துல்லியதுமான ஜிபிஎஸ் (GPS) நில அளவையாளர்களால் பயன் படுத்தப் படுகின்றது.
[தொகு] இடம் சார்ந்த குறிப்பு தரும் சேவைகள்
ஜிபிஎஸ் நகர்பேசிகளில் வழி தேடும் பொழுது அவ்விடத்திற்கு அருகே உள்ள கடைகள் உணவகங்கள், மருத்துவமனைகள் போன்ற பயனுடைய செய்திகளையும் குறிப்புகளையும் தரும்.
[தொகு] தொழில்நுட்பத் தகவல்கள்
செய்மதியில் இருந்து வரும் குறிப்பலைகள் (சமிக்கை, Signal) எடுக்கும் நேரத்தைக் கொண்டே இடத்தைக் கணிக்கினறது. எனவே ஓர் இடத்தின் அகலாங்கு, நெட்டாங்கு ஆகியவறைத் தீர்மானிப்பதற்கு ஆகக்குறைந்தது 3 செய்மதிகளேனும் தேவைப் படும். இத்துடன் கடல் மட்டத்திலிருந்தான உயரத்தைக் காணவேண்டும் எனில் ஆகக் குறைந்தது 4 செய்மதிகளேனும் தேவைப்படும்.

