வெள்ளைப்பூண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பூண்டு (வெள்ளைப்பூண்டு) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெள்ளைப் பூண்டு
Allium sativum, known as garlic, from William Woodville, Medical Botany, 1793.
Allium sativum, known as garlic, from William Woodville, Medical Botany, 1793.
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
(தரப்படுத்தப்படாத): பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத) ஒருவித்திலையி
வரிசை: Asparagales
குடும்பம்: வெங்காயக் குடும்பம்
பேரினம்: வெங்காயச் சாதி
இனம்: A. cepa
இருசொற்பெயர்
Allium cepa
லி.
மலைப்பூண்டு

பூண்டு அல்லது உள்ளி (Allium sativum) என்னும் சொல் பொது வகையால் கிழங்கில் வளரும் புல்லைக் குறிக்கும்.

கோரை, அறுகம்புல், வெங்காயம், வெள்ளைப்பூண்டு போன்றவற்றை பூண்டு என்னும் சொல் குறிக்கும்; என்றாலும் சிறப்பு வகையால் வெள்ளைப்பூண்டை மட்டுமே குறிக்கும்.

வெங்காயம் ஒரே மையத்தில் உரியும் அடுக்குத்தோல் கொண்ட கிழங்குவகை.பூண்டு பல பல்லடுக்குக் கொண்டது. இந்தப் பல பல்லடுக்குகள் ஓரிரு அடுக்குத் தோலால் மூடப்பட்டிருக்கும். வெங்காயத்தை ஈரவெங்காயம் என்றும், பூண்டை வெள்ளை-வெங்காயம் என்றும் சில வட்டாரங்களில் வழங்குவர். மலைப்பூண்டுப் பல் பெரிதாக இருக்கும். நாட்டுப்பூண்டுப் பல் சிறிதாக இருக்கும். உணவில் பூண்டைச் சேர்த்துகொள்வதால் உணவுக்கூழ் வயிற்றில் எளிதாகக் கரையும். இதனால் வயிற்றுப்பொருமல் நீங்கும்.

பிறப்பிடம்[தொகு]

பூண்டின் தாயகம் மத்திய ஆசியாக்கண்டமாகும். பிறகு இது இந்தியா மற்றும் மேலை நாடுகளுக்கு பரவியது.

குணங்கள்[தொகு]

எரிப்பும் காரமும் உடையது. முகர்ந்தால் நெடியுடையது.

விவசாயம்[தொகு]

பூண்டை நடுவதற்கு நாற்று அல்லது பூண்டுப்பல் பார்களில் நட்டுத் தண்ணீர் விட்டு வளர்ப்பார்கள். இதை புரட்டாசி மாதத்தில் நட்டு வளர்த்து பார்களிலிருந்து வளர்ந்த பின் தை மாதத்தில் வெட்டியெடுப்பார்கள்.

உற்பத்தி போக்குகள்[தொகு]

சீனாவில் பூண்டு அதிகமாக உற்பத்தி செய்யபடுகிறது.

உலகின் முதல் 10 பூண்டு உற்பத்தியாளர்கள் — 11 சூன் 2008
நாடு உற்பத்தியளவு (டன்களில்) குறிப்பு
சினாவின் கொடி சீன மக்கள் குடியரசு 12,088,000 F
இந்தியாவின் கொடி இந்தியா 645,000 F
தென் கொரியாவின் கொடி தென் கொரியா 325,000 F
எகிப்தின் கொடி எகிப்து 258,608 F
உருசியாவின் கொடி உருசியா 254,000 F
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா 221,810
எசுப்பானியாவின் கொடி எசுப்பானியா 142,400
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி அர்ஜென்டினா 140,000 F
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி மியான்மர் 128,000 F
உக்ரைனின் கொடி உக்ரைன் 125,000 F
World 15,686,310 A
No symbol = அதிகாரபூர்வ எண்ணிக்கை, P = official figure, F = FAO estimate, *= unofficial/semiofficial/mirror data,
C = calculated figure, A = aggregate (may include official, semiofficial, or estimates).

Source: Food And Agricultural Organization of United Nations: Economic and Social Department: The Statistical Division

மருத்துவப் பயன்கள்[தொகு]

நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறு துணையாகிறது. புற்று நோயையும் மற்ற நோய் தொற்றுகளையும் எதிர்க்க உதவுகிறது. வெள்ளணுத்திறனின் செயல் பாடுகளை அதிகரிக்கச் செய்கிறது. ஊளைச் சதையைக் கரைக்கும். தண்டுவட உறையழற்சிக்கும் சிறந்த மருந்தாகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. நீரழிவைக் குணப்படுத்தவும் உதவுகிறது. மாதவிடாய்க் கோளாறுக்கும் மருந்தாகும்.[1]

படத்தொகுப்பு[தொகு]

Korea-Goheunggun-Garlic harvest and transport.jpg
Garlic being hand harvested, loaded onto a truck, and ready for transport to a distribution center in rural Goheung county, South Jeolla province, South Korea

மேற்கோள்கள்[தொகு]

  1. http://mooligaivazam-kuppusamy.blogspot.com/2011/05/blog-post_31.html

"http://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளைப்பூண்டு&oldid=1739151" இருந்து மீள்விக்கப்பட்டது