புவனேசுவரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புவனேசுவர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புவனேசுவர்
—  தலைநகரம்  —
புவனேசுவர்
இருப்பிடம்: புவனேசுவர்
, ஒரிசா , இந்தியா
அமைவிடம் 20°16′N 85°50′E / 20.27, 85.84அமைவு: 20°16′N 85°50′E / 20.27, 85.84
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் ஒரிசா
மாவட்டம் குர்தா
ஆளுநர்
முதலமைச்சர் நவீன் பட்நாய்க்
மாநகராட்சித் தலைவர் மிகிர் கே. மோகந்த்தி
மக்கள் தொகை

அடர்த்தி

800. (2005)

4,900 /km2 (12 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

1,035 சதுர கி.மீட்டர்கள்s (400 சதுர மைல்)

33 மீட்டர்s (108 அடி)

புவனேசுவர் ஒரிசா மாநிலத்தின் தலைநகராகும். இது பண்டைய கலிங்க நாட்டின் தலைநகராகவும் விளங்கியது. இங்கு கோவில்கள் மிகுந்திருப்பதால் இந்தியாவின் கோவில் நகரம் என்றும் வழங்கப்படுகிறது.

1948-ஆம் ஆண்டு புவனேசுவர் இன்றைய ஒரிசாவின் தலைநகரமாக ஆக்கப்பட்டது. இதனுடைய மக்கள் தொகை 10 இலட்சத்திற்கும் கூடுதலாகும்.

போக்குவரத்து[தொகு]

சாலை[தொகு]

ஒரிசா போக்குவரத்துக் கழகத்தின் தலைமையகம் இங்குள்ளது. புவனேசுவர் பேருந்து நிலையம் நகரில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பர்முண்டா என்னுமிடத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து இதன் அண்டை மாநிலங்களான ஆந்திரா, மேற்கு வங்காளம், சார்க்கண்டு ஆகிய மாநிலங்களுக்கு பேருந்து வசதி உள்ளது.

Jaydev Bihar
Vani Vihar

தொடர்வண்டி[தொகு]

கிழக்குக் கடற்கரை இரயில்வேயின் தலைமையகம் புவனேசுவரில் உள்ளது. புவனேசுவர் இரயில் நிலையம் நாட்டின் முதன்மையான நிலையங்களுள் ஒன்று. இங்கிருந்து புதுதில்லி, மும்பை, சென்னை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு முதலிய பெருநகரங்களுக்கு தொடர்வண்டி வசதி உள்ளது. நகர் எல்லைக்குள் மொத்தம் ஐந்து இரயில் நிலையங்கள் உள்ளன.

வான்வழிப் போக்குவரத்து[தொகு]

புவனேசுவர் விமானநிலையம் என்றறியப்படும் பிசூ பட்நாயக் விமான நிலையமே ஒரிசாவில் உள்ள ஒரே பெரிய வானூர்தி நிலையமாகும். இங்கிருந்து நாட்டின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கும் போக்குவரத்து வசதி உள்ளது.

ஒரிசாவின் தலைமை செயலகம்
மகாத்மா காந்தி சாலை
ராஜ்பத் சாலை
"http://ta.wikipedia.org/w/index.php?title=புவனேசுவரம்&oldid=1437271" இருந்து மீள்விக்கப்பட்டது