புள்ளபூதங்குடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருபுள்ளபூதங்குடி வல்வில்ராமன் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்): பூதப்புரி[1]
பெயர்: திருபுள்ளபூதங்குடி வல்வில்ராமன் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்: திருப்புள்ளம்பூதங்குடி
மாவட்டம்: தஞ்சாவூர்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்: வல்வில் ராமன், சக்கரவர்த்தி திருமகன்
தாயார்: பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி)
தல விருட்சம்: புன்னை
தீர்த்தம்: ஜடாயு தீர்த்தம், க்ருத்ர தீர்த்தம்
பிரத்யட்சம்: ராமன், ஜடாயு
மங்களாசாசனம்
பாடல் வகை: நாலாயிரத் திவ்யப்பிரபந்தம்
மங்களாசாசனம் செய்தவர்கள்: திருமங்கையாழ்வார்
கட்டிடக்கலையும் பண்பாடும்
விமானம்: சோபன விமானம்.
கல்வெட்டுகள்: உண்டு
தொலைபேசி எண்: +91- 94435 25365[1]

திருபுள்ளபூதங்குடி என்பது கும்பகோணத்திற்கு அருகே சுவாமி மலைக்கு 4 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு திருத்தலம் ஆகும். இத்திருத்தலம் வைணவ ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 திருக்கோயில்களில் இது 10 வது திவ்ய தேசம். இங்கு புஜங்க சயம் என்ற எம்பெருமான் எழுந்தருளியுள்ளார்.

அமைந்துள்ள இடம்[தொகு]

கும்பகோணத்திலிருந்து சுவாமி மலைக்கு 4 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. ஸ்ரீஅகோபில மடத்தின் நிர்வாகத்தில் இக்கோவில் உள்ளது. மடத்திலே தங்கும் வசதிகள் உண்டு. திருஆதனூர் அருகிலே உள்ளது.

மூலவர்[தொகு]

புஜங்க சயம்- வல்வில் ராமன், கிழக்கே முக தரிசனம்.

தாயார்[தொகு]

பொற்றாமரையாள் (ஹேமா அம்புஜவல்லி)

தீர்த்தம்[தொகு]

ஜடாயு தீர்த்தம், க்ருத்ர தீர்த்தம்

விமானம்[தொகு]

சோபன விமானம்.

தல வரலாறு[தொகு]

ஏம முனிவரின் கடும் தவத்தை மெச்சிய நாராயணன், முனிவரிடம் என்ன வேண்டும்? என கேட்க, முனிவரும் முக்தி அளிக்க வேண்டினார். பெருமானோ முனிவரிடம், " பூலோகத்தில் முக்தி அளிக்கும் தலமான "கும்பகோணம்" சென்று தவம் செய்வீர், உரிய காலத்தில் யாம் அங்கு வந்து வேண்டியன அளிப்போம்" என்றார். அவ்வாறே முனிவரும் இங்கு வந்து மகாமக தீர்த்தத்தில் தவம் இருந்தார். ஒரு நாள், பொற்றாமரை குளத்தில் தங்கத் தாமரை ஒன்றில், அழகே உருவான குழந்தை ஒன்று இருப்பதை கண்டு, அக் குழந்தைக்கு "கோமளவல்லி" எனப் பெயரிட்டு தானே வளர்க்கலானார். கோமளவல்லியும் வளர்ந்து பருவம் எய்தி, "மணந்தால், திருமாலையே மணப்பேன் " எனக் கூற, மகளாய் இருப்பது "திருமகள்" தான் என அறிந்த ஏம முனிவரும், முகுந்தனை பிரார்த்திக்க, எம் பெருமான் இத்தலத்தில் எழுந்தருளி, கோமளவல்லியை மணம் புரிந்து, முனிவருக்கு முக்தியும் அளித்தார்.

சிறப்பம்சம்[தொகு]

திருமகளை மணம் புரிய, பெருமான் தான் எழுந்தருளிய ரதத்துடனேயே இங்கு தங்கி விட்டதாக ஐதீகம். இதை பறை சாற்றுவது போல், இத் தலத்தின் கருவறை, யானை, குதிரைகளுடன் கூடிய ரத வடிவிலேயே உள்ளது. இதனாலேயே " பூலோக வைகுந்தம் ", " நித்ய வைகுந்தம் " என்றெல்லாம் இத் திருக்கோயில் வணங்கப்படுகிறது. இந்த ஆலயமே வைகுந்தமாக வழிபடப்படுவதால், இங்கு தனியாக "சொர்க்க வாசல்" கிடையாது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு மேலான பழமையும், பெருமையும் கொண்டது இத் திருத்தலம்.பெருமாளுடைய பாதாரவிந்தங்களில் திருமங்கை ஆழ்வாரும், காமதேனுவும் உள்ளனர். எப்பெருமாளை ஆதனூர் ஆண்டாளுக்கும் அய்யன்" என்பர்.

மங்களாசாசனம்[தொகு]

திருமங்கையாழ்வார் இக்கோவிலைப் பற்றி 10 பாசுரங்கள் இயற்றி உள்ளார்.

மேவா அரக்கர் தென் இலங்கை வேந்தன் வீயச் சரம் துரந்து
மா வாய் பிளந்து மல் அடர்த்து மருதம் சாய்த்த மாலது இடம்-
கா ஆர் தெங்கின் பழம் வீழ கயல்கள் பாய குருகு இரியும்
பூ ஆர் கழனி எழில் ஆரும்- புள்ளம்பூதங்குடி-தானே.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=புள்ளபூதங்குடி&oldid=1722483" இருந்து மீள்விக்கப்பட்டது