புளியோதரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புளியோரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புளியோதரை (puliyodharai) தென்னிந்தியாவில் உண்ணப்படும் பரவலான உணவு. இது பெரும்பாலும் வைணவக் கோயில்களில் பிரசாதமாக வழங்கப்பட்டாலும், வீட்டில் சமைத்தும் உண்பர். புளி+ ஓரை (சமைத்த அரிசி) = புளியோரை. புளியோரை என்பதே பின்னர் மருவி புளியோதரை என்றாகியது. கன்னடத்தில் ஹுளியன்னா (புளி + அன்னம்) எனவும் தெலுங்கில் புலிஹோரா (புளி + ஓரை) என்றும் அழைக்கின்றனர். தமிழ் பிராமண அய்யங்கார்களே இதை அதிகம் விரும்பி உண்பர். புளிக் கரைசல், வேர்க்கடலை, மிளகாய், மிளகு, வெந்தயம், கறிவேப்பிலை, தேங்காய் ஆகியனவற்றை வெந்த அரிசியுடன் கலந்து புளியோரை செய்யப்படும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=புளியோதரை&oldid=1732759" இருந்து மீள்விக்கப்பட்டது