புற ஊதாக் கதிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புற ஊதாக்கதிர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
படிமம்:Blue sun.jpg
கதிரவனில் இருந்து வெளிப்படும் புற ஊதாக் கதிர்களைக் காண, மிகக் குறைந்த அலைநீளம் கொண்ட புற ஊதாக் கதிர் தொலைநோக்கி ஒன்றைக்கொண்டு எடுத்த படம். இதில் காணப்படும் நிறம் உண்மையான நிறம் அல்ல, ஆனால் ஒளி அலைகளின் அடர்த்திக்கு ஏற்றார்போல மாற்றப்படும் பொய்நிறம் கொண்ட படம் ஆகும். கதிரவனைச் சுற்றி உள்ள ஒளிவட்டம் அல்லது சூழ்ப் பிழம்புப் (corona, கரோனா)பகுதி படத்தில் தென்படுகின்ன்றது.
அப்போலோ-16 என்னும் விண்கலைத்தில் இருந்து, விண்ணோட்டிகள், நில உலகை, நிலாவில் இருந்து எடுத்த புற உதாக் கதிர் படம்.

புற ஊதாக் கதிர் (ultraviolet light) என்பது கண்களால் பார்த்து பெரும்பாலும் உணரமுடியாத மின்காந்த ஒளி அலைகள் ஆகும். சூரிய ஒளியின் நிறமாலையில் (Spectrum) கண்ணுக்குப் புலப்படுகின்ற சிவப்பு முதல் ஊதா வரையான கதிர்களின் ஒழுங்கில், ஊதாக்கதிர்களுக்கு அப்பால் இருப்பதால் இது புற ஊதாக் கதிர் எனப்படுகின்றது.

பொதுவாக கண்களால் பார்த்து உணரவல்ல ஒளி அலைகள் அதிக அலைநீளம் (750 நானோ மீ) கொண்ட கருஞ்சிவப்பு அலைகளில் இருந்து மிகக்குறைந்த அலைநீளம் (380 நானோ மீ) கொண்ட கரும் ஊதா (நீல) நிற அலைகள் வரை ஆகும். அறிவியலில் புற ஊதாக்கதிர்கள் என்பன 400 நானோ மீட்டர் நீள மின்காந்த "ஒளி" அலைகள் முதல் 10 நானோமீட்டர் அலைநீளம் கொண்ட அலைகள் ஆகும் என்று வரையறை செய்யப்படுகின்றது. புற ஊதாக் கதிர்களைக் காண முடியாவிட்டாலும் சில பறவைகளாலும் பூச்சிகளாலும் பார்க்க முடியும். அலைநீளம் குறைவாக இருந்தால் அவ்வொளி அலையின் ஆற்றல் கூடுதலாகும். புற ஊதாக் கதிர்களின் ஆற்றல் பரப்பு 3 எலக்ட்ரான் வோல்ட் (eV) முதல் 124 எவோ (eV) வரை ஆகும். புற ஊதாக் கதிர்களின் ஆற்றல் புதிர்க்கதிர்கள் எனப்படும் எக்சு கதிர்களின் (X-ray) ஆற்றலைவிடக் குறைவானது.

மிகச் சிறிய அளவு வரை நமது உடலுக்கு இது தேவைப்பட்டாலும், நம் உடலில் பட்டால் தோல் உடனே வெந்துவிடக் கூடியது. வெளியிலிருந்து வரும் புற ஊதாக் கதிர்களை பூமியின் மேல் மண்டலத்திலிருக்கும் ஓசோன் தடுத்து விடுவதாலேயே நாம் பூமியில் உயிருடன் இருக்க முடிகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=புற_ஊதாக்_கதிர்&oldid=1386520" இருந்து மீள்விக்கப்பட்டது