புறவயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புறவயம் (objectivity) என்பது பல்வேறு வகையில் வரைவிலக்கணம் கொடுக்கப்படும் உண்மைநிலை, உண்மை என்பன தொடர்பான ஒரு மெய்யியல் கருத்துரு ஆகும். பொதுவாகப் புறவயம் என்னும் சொல் குறித்த விடயத்தை வெளிப்படுத்துபவரது தனிப்பட்ட பக்கச்சார்பு, விளக்கங்கள், உணர்வுகள், கற்பனைகள் என்பவற்றுக்கு அப்பால் உண்மையாக இருக்கும் நிலை அல்லது தன்மை எனப் பொருள்படும். உண்மையாய் இருப்பதற்கான நிபந்தனைகளை நிறைவு செய்வதுடன், "மனதில் தங்கியிராமலும்" இருக்கும்போது ஒரு கூற்று புறவயமான உண்மை எனப்படுகின்றது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புறவயம்&oldid=1777638" இலிருந்து மீள்விக்கப்பட்டது