புரோமசமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோமசமிலம்
Space-filling model of the bromous acid molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
ஐதராக்சி-λ3-புரோமனோன்
ஐதராக்சிடோராக்சிடோபுரோமின்
புரோமசமிலம்
இனங்காட்டிகள்
ChEBI CHEBI:29247 Y
ChemSpider 145144 Y
InChI
  • InChI=1S/BrHO2/c2-1-3/h(H,2,3) Y
    Key: DKSMCEUSSQTGBK-UHFFFAOYSA-N Y
  • InChI=1/BrHO2/c2-1-3/h(H,2,3)
    Key: DKSMCEUSSQTGBK-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 165616
SMILES
  • O=BrO
பண்புகள்
HBrO2
வாய்ப்பாட்டு எடை 112.911 கி/மோல்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் ஐதரோபுரோமிக் அமிலம்; ஐப்போபுரோமசமிலம்; புரோமிக் அமிலம்; பெர்புரோமிக் அமிலம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

புரோமசமிலம் (Bromous acid) என்பது HBrO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அமிலமாகும். இவ்வமிலத்தில் புரோமின் +3 ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது. புரோமசமிலத்தின் உப்புகள் புரோமைட்டுகள் எனப்படுகின்றன. இந்த அமிலம் நிலையற்றது மற்றும் ஒரு வினையில் இடைநிலையாக உருவாகிறது. உதாரணமாக, ஐப்போபுரோமைட்டுகளின் ஆக்சிசனேற்ற வினையின்[1] போது இது இடைநிலையாகத் தோன்றுகிறது.

வேதியியல்[தொகு]

மரபார்ந்த வேதியியல் முறை அல்லது மின்வேதியியல் முறையில் நேர்மின் முனை ஆக்சிசனேற்றம் வழியாக புரோமசமிலத்தைத் தயாரிக்க முடியும்.

HBrO + HClO → HBrO2 + HCl

ஐப்போ புரோமசமிலத்தை விகிதச் சிதைவுக்கு உட்படுத்தினால் அது புரோமசமிலம் மற்றும் ஐதரோபுரோமிக் அமிலம் ஆகியனவாகப் பிரிகிறது.

2 HBrO → HBrO2 + HBr

புரோமிக் அமிலமும் ஐதரோ புரோமிக் அமிலமும் விகிதச்சேர்க்கை வினையில் ஈடுபட்டு புரோமசமிலத்தைக் கொடுக்கின்றன.

2 HBrO3 + HBr → 3 HBrO2

சேர்மங்கள்[தொகு]

பல புரோமைட்டு சேர்மங்கள் நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகின்றன. இவற்றைத் தனித்துப் பிரிக்கவும் இயலும். உதாரணமாக , NaBrO2• 3H2O மற்றும் Ba(BrO2)2•H2O.[1]

பயன்கள்[தொகு]

பெர்மாங்கனேட்டுகளை மாங்கனேட்டுகளாக ஒடுக்கும் வினைகளில் புரோமைட்டுகள் பயன்படுகின்றன.

2MnO
4
+ BrO
2
+ OH → 2MnO2−
4
+ BrO
3
+ H2O

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Egon Wiberg, Arnold Frederick Holleman (2001) Inorganic Chemistry, Elsevier ISBN 0-12-352651-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோமசமிலம்&oldid=2897919" இலிருந்து மீள்விக்கப்பட்டது