புனாகா சோங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனாகா சோங்
புங்டங் டேசென் ஃபோட்ரங் சோங்
புனாகா சோங்
புனாகாவில் ஜாகரன்டா மரங்கள் சூழ உள்ள புங்டங் டேசென் ஃபோட்ரங் சோங்
புனாகா சோங் is located in பூட்டான்
புனாகா சோங்
பூட்டான் இல் அமைவிடம்
மாற்றுப் பெயர்கள்புங்டங் டேசென் ஃபோட்ரங் சோங்
பொதுவான தகவல்கள்
வகைசமய மற்றும் குடிசார் நிர்வாகம்
கட்டிடக்கலை பாணிசோங்
இடம்புனாகா, பூட்டான்
உயரம்1,200
கட்டுமான ஆரம்பம்1637
நிறைவுற்றது1638
புதுப்பித்தல்2004
உரிமையாளர்பூட்டான் அரசு
தொழில்நுட்ப விபரங்கள்
அமைப்பு முறைகோட்டை
தள எண்ணிக்கைஆறு
வடிவமைப்பும் கட்டுமானமும்
கட்டிடக்கலைஞர்(கள்)சோவே பாலெப் மற்றும் சப்ரதுங் கவங் நம்கியால்

புனாகா சோங் (Punakha Dzong), அல்லது புங்டங் டேசென் ஃபோட்ரங் சோங் (Pungtang Dechen Photrang Dzong) (பொருள்: “பெரும் மகிழ்ச்சி அல்லது இன்பம் நிறைந்த அரண்மனை”[1][2]) பூட்டானின் புனாகாவில் அமைந்துள்ள புனாகா மாவட்ட நிர்வாக மையமாகும். 1637-38ஆம் ஆண்டுகளில் சப்ரதுங் கவங் நம்கியாலால் கட்டப்பட்ட[1][3] இந்தக் கோட்டை மிக அழகானதும் பூட்டானின் இரண்டாவது மிகப்பழமையானதும் மிகப்பெரியதுமானதாகும். [1][4] இந்தக் கோட்டையில் தென் ட்ருக்பா கக்யூ பள்ளியின் புனித எச்சங்களும் ரங்ஜுங் கசர்பானி , சப்ரதுங் கவங் நம்கியால் மற்றும் பேமா லிங்பாவின் புனித எச்சங்களும் அடங்கியுள்ளன. 1955ஆம் ஆண்டில் தலைநகர் திம்புவிற்கு மாறும்வரை புனாகா சோங் நிர்வாக மையமாகவும் பூட்டான் அரசின் இருப்பிடமாகவும் விளங்கியது. [2][4][5]

அரச திருமணம்[தொகு]

அக்டோபர் 13, 2011 அன்று பூட்டான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கியல் வாங்சுக் மற்றும் ஜெட்சுன் பெமாவின் திருமணம் இந்தக் கோட்டையில் நடந்தது. [6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Dzong at Punakha". பார்க்கப்பட்ட நாள் 2010-04-01. பூட்டானின் இரண்டாவது மிகப்பழம் கோட்டையின் கட்டுமானம் 1637ஆம் ஆண்டு சப்ரதுங் கவங் நம்கியால் ஆணைப்படி துவங்கப்பட்டது. இது 1744-1763 ஆண்டுகளில் சமயசார்பற்ற ஆட்சியர் 13வது தேசி (சரிசமமான அதிகாரம் கொண்ட பூட்டானின் முதன்மை மடாதிபதி ஜெ கெங்போவிற்கு எதிராக) செரப் வாங்சுக்கால் விரிவாக்கப்பட்டது.
  2. 2.0 2.1 Wangchuck, Ashi Dorji Wangmo (2006). Treasures of the thunder dragon: a portrait of Bhutan. Penguin, Viking. பக். 40–41, 102. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0670999016. http://books.google.co.in/books?id=oxtuAAAAMAAJ&q=Punakha+Dzong&dq=Punakha+Dzong&hl=en&ei=LWyxS_bjHMG_rAfO8pTWAw&sa=X&oi=book_result&ct=result&resnum=4&ved=0CEQQ6AEwAzgK. பார்த்த நாள்: 2010-04-01. 
  3. Pommaret, Francoise (2006). Bhutan Himlayan Mountains Kingdom (5th edition). Odyssey Books and Guides. பக். 192. 
  4. 4.0 4.1 "Punakha Dzong". Tourism:Government of Bhutan. Archived from the original on 2017-09-07. பார்க்கப்பட்ட நாள் 2010-04-01.
  5. Brown, Lindsay; Bradley Mayhew, Stan Armington and Richard Whitecros (2007). Bhutan. Lonely Planet. பக். 146–147. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1740595297. http://books.google.co.in/books?id=s-L8NUlW_QgC&pg=PA146&dq=Punakha+Dzong&hl=en&ei=pWixS5zqEpK7rAefgaGYBA&sa=X&oi=book_result&ct=result&resnum=4&ved=0CEcQ6AEwAw#v=onepage&q=Punakha%20Dzong&f=false. பார்த்த நாள்: 2010-04-01. 
  6. Plowright, Adam (2011-09-06). "Bhutan gets royal wedding fever". Agence France Presse இம் மூலத்தில் இருந்து 2013-01-03 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130103085904/http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hMKyDxXdoyKYTWJfEXCNlZA_gVeg?docId=CNG.3a1c782b809d44f77168bf5469b0df07.251. பார்த்த நாள்: 2011-10-02. 

வெளியிணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Punakha Dzong
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புனாகா_சோங்&oldid=3564439" இலிருந்து மீள்விக்கப்பட்டது