புத்தா அசாரம் ஃபொரு ரிக்ட் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Buda as sharm foru rikht
இயக்கம்கனா மக்மால்பஃப்
தயாரிப்புமேசாம் மக்மால்பஃப்
கதைமர்ஸி மக்மால்பஃப்
இசைதோலிபோன் ஷகிதி
நடிப்புஅப்பாஸ் அலிஜோம், அப்டோலாய் ஹோஸினாலி, நிக்பாகத் நெளருஸ்
ஒளிப்பதிவுஒஸ்தாத் அலி
படத்தொகுப்புமஸ்தானே மொகஜெர்
வெளியீடுசெப்டம்பர் 9, 2007 (2007-09-09)
நாடுஈரான்
மொழிபாரசீகம்

புத்தா அசாரம் ஃபொரு ரிக்ட் (ஆங்கிலம்: Buddha Collapsed Out of Shame) 2007-ல் வெளிவந்த ஈரானியத் திரைப்படம் ஆகும். இப்படத்தை இயக்கியவர் கனா மக்மால்பஃப் ஆவார்.

திரைப்படம்[தொகு]

இத்திரைப்படத்தின் கதையானது ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் வீழ்ச்சிக்குப் பிறகு நடப்பதாக உள்ளது. 5 வயது ஆப்கான் பெண் பக்தே (Bakhtay) கல்வி கற்க ஆசைப்பட்டு அதற்காகப் போர், வறுமை மற்றும் ஆணாதிக்கம் ஆகியவற்றைச் சந்திப்பதைப் பற்றிய திரைப்படம் இது.[1]பக்தேவாக நிக்பாகத் நெளருஸ் (Nikbakht Noruz) நடித்துள்ளார்.

விருதுகள்[தொகு]

  • புத்தா கொலாப்ஸ்டு அவுட் ஆப் ஷேம் (Buddha Collapsed out of Shame) 2007 ஆம் ஆண்டு கனடாவில் விருது பெற்றது.
  • ஸ்பெயினில் நடந்த சான் செபாஸ்டியன் சர்வதேசத் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகள் கிடைத்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Movie Review: 'Buddha Collapsed out of Shame'". Archived from the original on 2012-10-08. பார்க்கப்பட்ட நாள் 2013-10-19.