புது வாழ்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புது வாழ்வு
இயக்கம்எம். கே. தியாகராஜ பாகவதர்
தயாரிப்புபாகவதர்
சர்வோதயா பிக்சர்ஸ்
கதைகதை இளங்கோவன்
ஏ. கே. வேலன்
இரைமுடி மணி
இசைஜி. ராமநாதன்
சி. என். பாண்டுரங்கன்
நடிப்புஎம். கே. தியாகராஜ பாகவதர்
டி. எஸ். பாலையா
துரைராஜ்
ரங்காச்சாரி
பொன்னுசாமி பிள்ளை
வி. கே. ஆச்சாரி
என். எஸ். கிருஷ்ணன்
லலிதா
கே. என். கமலம்
கல்யாணியம்மாள்
டி. ஏ. மதுரம்
அம்பிகை
வெளியீடுமார்ச்சு 8, 1957
ஓட்டம்.
நீளம்17075 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புது வாழ்வு (Pudhu Vazhvu) 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இளங்கோவன் எழுத்தில், எம். கே. தியாகராஜ பாகவதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. தியாகராஜ பாகவதர், டி. எஸ். பாலையா ,லலிதா மாதுரி தேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

கதை[தொகு]

வைகுண்டம் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு இளைஞன். அவன் ஒரு நல்ல பாடகராகவும், நாகம்மையை நேசிப்பவராகவும் அன்புடன் இருக்கிறார். ஆனால் நாகம்மையின் சகோதரர் அவர்களது காதலை எதிர்த்து நிற்கிறார். ஒரு நாள் அவர் வைகுந்தத்தை ஒரு மரத்தில் கட்டி வைத்து விடுகிறார். அவ்வழியே வந்த ஒரு செல்வந்த பெண்ணால் வைகுண்டம் காப்பாற்றப்படுகிறார். அவள் தனது நகரத்திற்கு வைகுந்தத்தை அழைத்துச் செல்கிறாள். வைகுந்தம் பாடல்களை பாடும் திறமை வாய்ந்தவர் என்று தெரிந்தவுடன், அவரை ஒரு பாடகராக விளம்பரப்படுத்துகிறார். அவர் அவரை "கீதாமணி" என்று மறு பெயரிடுகிறார்.. வைகுண்டம் புகழ்பெற்றவராகவும் பணக்காரராகவும் ஆகிறார். அவர் தனது பெற்றோரை புறக்கணித்து, அவர்களை தவறாக நடத்துகிறார். அவரது காதலி நாகம்மாள் அவரது நடத்தை காரணமாக தற்கொலை செய்ய முயற்சிக்கிறார். கீதாமணி எவ்வாறு தனது தவறை புரிந்துகொள்கிறார், என்பதும் நாகம்மாள் மற்றும் தனது பெற்றோருடன் எவ்வாறு சேர்கிறார் என்பது மீதி கதையாகும்.[1]

நடிகர்கள்[தொகு]

தி இந்து நாழிதளில் வெளிவந்த ஒரு கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது.[1]

தியாகராஜ பாகவதர்
மாதுரி தேவி
பி. பி/ ரங்காச்சாரி
லலிதாகுமாரி துளசி
என். எஸ். கிருஷ்ணன்
டி. ஏ. மதுரம்
டி. எஸ். பாலையா
டி. எஸ். துரைராஜ்
அம்பிகா
ஆள்வார் குப்புசாமி
கே. என். கமலம்
கே. ஏ. தங்கவேலு
குலதெய்வம் ராஜகோபால்
எஸ். ஆர். கோபால்
டி. பி. பொன்னுசாமி
வி. கே. ஆச்சார்
டி. வி. கல்யாணி அம்மாள்

ஒலித்தொகுப்பு[தொகு]

இசையமைப்பு ஜி. ராமநாதன் மற்றும் சி. என். பாண்டுரங்கன், பாடல்கள் பாபநாசம் சிவன், தஞ்சை இராமையாதாஸ், அ. மருதகாசி, நடராஜ சுந்தரம் ,சரவணபவானந்தா மற்றும் சுரதா. பாடல்களைப் பாடியோர் தியாகராஜ பாகவதர், என். எஸ். கிருஷ்ணன் டி. ஏ. மதுரம் , பி. லீலா, ஜிக்கி, ராதா ஜெயலட்சுமி மற்றும் ஜெயலஷ்மி.[1]

விமர்சனம்[தொகு]

திரைப்பட வரலாற்றாசிரியர் ராண்டார் கை 2014 இல் இவ்வாறு எழுதுகிறார். 2014 ஆம் ஆண்டில் இந்த திரைப்படம் தோல்விப்படமாக இருந்தாலும் அரை நூற்றாண்டுக்கும் மேலாக அதன் இசை இன்னும் கேட்கும் விதமாக இருக்கிறது.[1]

உசாத்துணை[தொகு]

Pudhu Vazhvu 1957 பரணிடப்பட்டது 2014-09-13 at Archive.today, ராண்டார் கை, தி இந்து, செப்டம்பர் 13, 2014

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Guy, Randor (13 செப்தெம்பர் 2014). "Pudhu Vazhvu 1957". தி இந்து. Archived from the original on 13 செப்தெம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 6 பெப்பிரவரி 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புது_வாழ்வு&oldid=3796946" இலிருந்து மீள்விக்கப்பட்டது