புதுவைப் பல்கலைக்கழகம்
| புதுவைப் பல்கலைக்கழகம் | |
| Pondicherry University | |
புதுவைப் பல்கலைக்கழக முத்திரை |
|
| குறிக்கோளுரை | தமிழ்: ஒளி பரவ பிரெஞ்சு மொழி: Vers la Lumière |
|---|---|
| ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | Let Light Spread |
| நிறுவிய நாள் | 1985 |
| வகை | சேர் பல்கலைக்கழகம் |
| வேந்தர் | முகம்மது அமீத் அன்சாரி |
| துணைவேந்தர் | பேரா. ஜலீஸ் அக்மெத் காண் தரீன் |
| மாணவர்கள் | 25,000 |
| அமைவிடம் | , புதுவை, அமைவு: |
| வளாகம் | நாட்டுப்புறம், 780 ஏக்கர்கள் |
| குறி பெயர் | PU |
| இணையத்தளம் | pondiuni.edu.in |
புதுவைப் பல்கலைக்கழகம் இந்திய அரசின் மத்திய பல்கலைக்கழகங்களில் (central university) ஒன்றாகும். 1985ல் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகத்தின் கீழ் 59 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதன் கிளை வளாகங்கள் புதுவை, காரைக்கால், அந்தமான் நிக்கோபார் தீவுகள் மற்றும் இலட்சத்தீவுகளில் உள்ளது.
இது 13 இயற்புலன்களை (schools) உடையது.
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் இப்பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், பேரா. ஜலீஸ் அக்மெத் காண் தரீன் துணைவேந்தராகவும் இருக்கிறார்கள்.
[தொகு] புதுவைப் பல்கலைக்கழகப் பண்[1]
புதுவைப் பல்கலைக்கழகப் பண், இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரான பேரா. ஜலீஸ் அக்மெத் காண் தரீனால் ஆங்கிலத்தில் எழிதப்பட்டு, திரு.பழனி பாரதி, பேரா. பாலசுப்பிரமணியன் மற்றும் பேரா. குணசேகரன் என்பவர்களால் தமிழ் வடிவம் கொடுக்கப்பட்டது. இதன் இசையமைப்பாளர் திரு. ஆர். பரத்வாஜ் ஆவார். மின்னணு தொடர்புத்துறை இயற்புலத்தால் (Center for Electronic Media) காணொளி வடிவில் வெளியிடப்பட்டது.
தமசோமா ஜோதிர்கமய[2]
தமசோமா ஜோதிர்கமய
ஒளிபரவ, ஒளிபரவ
புதுவை புதுவை புதுவையே போற்றுவோம்
புதுவை பல்கலைக் கழகமே உனை
வாழ்த்துவோம்
வங்கக் கடலலை தாலாட்டும்
ஞானச் சூரியன் உதிக்குமிடம்
இது எங்கள் புதுநெறி காட்டும் உலகம்
எந்நாளும் அறிவுத் தேடல் தொடரும்
அறிவூற்றைப் பொழியும் ஆசிரியர் - அதில்
தினமும் நனையும் மாணவர்கள்
இதிலன்றோ புதுவைப் பல்கலைக் கழகம்
அறிவின் தாகம் தணியும் சோலை
அகிலம் போற்றும் கல்விச் சாலை
மனித வளமே என்றும் உயர
புனித சேவை தொடருதே
பாரதித் தமிழால் நனைத்த இடம் - எங்கள்
பாரதிதாசன் விளைந்த நிலம்
அரவிந்தர் ஆசிகள் பெற்றதுடன்
அகில உலகிற்கு ஒளிர்விடும் இனிய தளம்
அறிவிச் சுடரொளி நெஞ்சில் எழ
யாதும் ஊரே யாவரும் கேளிர்
மாண்பினை உரைக்கும் மக்கள் அரங்கம்
ஆ அ ஆ அ ஆ........(2)
இதிலன்றோ புதுவைப் பல்கலைக் கழகம்
அறிவின் தாகம் தணியும் சோலை
அகிலம் போற்றும் கல்விச் சாலை
மனித வளமே என்றும் உயர
புனித சேவை தொடருதே
பல்கலைக் கழகம் என்றும் வளர்ந்திட
நாமும் வழிபடுவோம் - கல்விச்
சேவைகள் யாவும் காலமும்
தொடர்ந்திட நாளும் வேண்டுவோம்
புதுவையே புதுமையே போற்றிடும் பல்கலைக் கழகமே
என்றும் வாழ்கவே ! வாழ்கவே ! வாழ்கவே ! வாழ்கவே !
புதுவை புதுவை புதுவையே போற்றுவோம்
புதுவை பல்கலைக் கழகமே உனை வாழ்த்துவோம் (2)
[தொகு] மேற்கோள்கள்
- ↑ புதுவைப் பல்கலைக்கழகப் பண்: பாடல் வரிகள் மற்றும் காணொளி வடிவில்
- ↑ "தமசோமா ஜோதிர்கமய" என்றால் "இருளிலிருந்து ஒளியை நோக்கி" என்று பொருள்