புதுச்சேரி முதலமைச்சர்களின் பட்டியல்
|
இக்கட்டுரை |
புதுச்சேரி முதலமைச்சர் (அ) புதுவை முதல்வர்- இந்தியாவின் புதுச்சேரி ஒன்றிய ஆட்சிப் பகுதி அமைச்சரவையின் தலைமை அமைச்சர் ஆவார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பெறும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் புதுவை மக்களின் வாக்குகளால் வெற்றி பெறும் உறுப்பினர்களின் பெரும்பான்மையைச் சார்ந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பெற்று அவர்களின் பரிந்துரையின் படி புதுச்சேரியின் துணை நிலை ஆளுநரால் ஆளுமை புரிய அழைத்ததின் பேரில் புதுவையின் முதல்வராக ஐந்து ஆண்டுகள் ஆளுமை புரிய கடமைபட்டவராவார்.
இவரே புதுச்சேரியின் முதன்மை செயலாட்சியர் ஆவார். இவருக்கென்று தனியான இலாக்காக்கள் என்று ஒதுக்கப்படவில்லை இருப்பினும் சிறப்பு இலாக்காக்களை இவர் கவனிப்பவர். ஆட்சிப் பகுதியின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் அரசு ஆணைகள், செயல் அலுவலர்களின் பணி மாற்றம் போன்ற அனைத்தும் நிருவாக செயல்திட்டங்களும் இவரால் மேற்கொள்ளப்படும்.
இவரின் அலுவலகம் மற்றும் இவரது அமைச்சரவையின் அலுவலகமும் புதுச்சேரியில் இடம்பெற்றுள்ளத் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ளது.
இவருக்கு துணை புரிய எற்படுத்தபெற்ற அமைச்சரவைக்கென ஒதுக்கப்பெற்ற தனி இலக்காக்ளுடன் அமைச்சர்கள் அவ்விலாக்காக்களில் ஆளுமை புரிவர். இவர்கள் இலக்காக்களின் முதன்மை செயலாட்சியர்களாக இருப்பர்.
புதுச்சேரியின் தற்பொழுதய முதலமைச்சர் மாண்புமிகு திரு வீ. வைத்தியலிங்கம்
புதுச்சேரி முதலமைச்சர்களின் பட்டியல் [தொகு]
| வ.எண் | சட்டப்பேரவை | பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு | கட்சி |
|---|---|---|---|---|---|
| 1 | முதல் சட்டப்பேரவை | எட்வர்ட் குபேர் | 1 ஜூலை 1963 | 24 ஆகஸ்டு 1964 | இ.தே.கா |
| 2 | இரண்டாவது சட்டப்பேரவை | வி. வெங்கடசுப்பா ரெட்டியார் | 11 செப்டம்பர் 1964 | 8 ஏப்ரல் 1967 | இ.தே.கா |
| 3 | இரண்டாவது சட்டப்பேரவை | எம். ஒ. எச். பரூக் | 9 ஏப்ரல் 1967 | 5 மார்ச் 1968 | இ.தே.கா |
| 4 | இரண்டாவது சட்டப்பேரவை | வி.வெங்கடசுப்பா ரெட்டியார் | 6 மார்ச் 1968 | 17 செப்டம்பர் 1968 | இ.தே.கா |
| 5 | மூன்றாவது சட்டப்பேரவை | எம். ஒ. எச். பரூக் | 17 மார்ச் 1969 | 2 ஜனவரி 1974 | தி.மு.க |
| 6 | நான்காவது சட்டப்பேரவை | சுப்பிரமணியன் ராமசாமி | 6 மார்ச் 1974 | 27 மார்ச் 1974 | அ.இ.அ.தி.மு.க |
| 7 | ஐந்தாவது சட்டப்பேரவை | சுப்பிரமணியன் ராமசாமி | 2 ஜூலை 1977 | 11 நவம்பர் 1978 | அ.இ.அ.தி.மு.க |
| 8 | ஆறாவது சட்டப்பேரவை | எம். டி. ஆர். இராமச்சந்திரன் | 16 ஜனவரி 1980 | 23 ஜூன் 1983 | தி.மு.க |
| 9 | ஏழாவது சட்டப்பேரவை | எம். ஒ. எச். பரூக் | 16 மார்ச் 1985 | 4 மார்ச் 1990 | இ.தே.கா |
| 10 | எட்டாவது சட்டப்பேரவை | எம். டி. ஆர். இராமச்சந்திரன் | 8 மார்ச் 1990 | 3 மார்ச் 1991 | தி.மு.க |
| 11 | ஒன்பதாவது சட்டப்பேரவை | வி. வைத்தியலிங்கம் | 4 ஜூலை 1991 | 13 மே 1996 | இ.தே.கா |
| 12 | பத்தாவது சட்டப்பேரவை | ஆர். வி. ஜானகிராமன் | 26 மே 1996 | 21 மார்ச் 2000 | தி.மு.க |
| 13 | பத்தாவது சட்டப்பேரவை | பி. சண்முகம் | 22 மார்ச் 2000 | 15 மே 2001 | இ.தே.கா |
| 14 | பதினொன்றாவது சட்டப்பேரவை | பி. சண்முகம் | 24 மே 2001 | 26 அக்டோபர் 2001 | இ.தே.கா |
| 15 | பதினொன்றாவது சட்டப்பேரவை | என். ரங்கசாமி | 27 அக்டோபர் 2001 | 12 மே 2006 | இ.தே.கா |
| 16 | பன்னிரண்டாவது சட்டப்பேரவை | என். ரங்கசாமி | 18 மே 2006 | 4 செப்டம்பர் 2008 | இ.தே.கா |
| 17 | பன்னிரண்டாவது சட்டப்பேரவை | வி. வைத்தியலிங்கம் | 4 செப்டம்பர் 2008 | 14 மே 2011 | இ.தே.கா |
| 18 | பதிமூன்றாவது சட்டப்பேரவை | என். ரங்கசாமி | 15 மே 2011 | தற்பொழுது | அ.இ.N.R.கா |
புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி [தொகு]
| வ.எண் | பெயர் | பதவி ஆரம்பம் | பதவி முடிவு | காரணம் |
|---|---|---|---|---|
| 01 | குடியரசுத் தலைவர் ஆட்சி | 18 செப்டம்பர் 1968 | 17 மார்ச் 1969 | தேர்தலுக்காக |
| 02 | குடியரசுத் தலைவர் ஆட்சி | 3 ஜனவரி 1974 | 6 மார்ச் 1974 | தேர்தலுக்காக |
| 03 | குடியரசுத் தலைவர் ஆட்சி | 28 மார்ச் 1974 | 2 ஜூலை 1977 | அவசரகாலப் பிரகடனம் |
| 04 | குடியரசுத் தலைவர் ஆட்சி | 12 நவம்பர் 1978 | 16 ஜனவரி 1980 | அவசரகாலப் பிரகடனம் |
| 05 | குடியரசுத் தலைவர் ஆட்சி | 24 ஜூன் 1983 | 16 மார்ச் 1985 | அவசரகாலப் பிரகடனம் |
| 06 | குடியரசுத் தலைவர் ஆட்சி | 4 மார்ச் 1991 | 3 ஜூலை 1991 | தேர்தலுக்காக |
வெளிப்புற இணைப்புகள் [தொகு]
|
||||||||||||||||||||||||||||||||||||