புதுச்சேரி மக்களவைத் தொகுதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகியவை இணைந்ததே புதுச்சேரி. இவற்றில் மொத்தம் 30 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. அனைத்தும் இணைந்ததே புதுச்சேரி மக்களவைத் தொகுதி.
இங்கு வென்றவர்கள் [தொகு]
| ஆண்டு | பொதுத் தேர்தல் | பதிவான வாக்குகள் | வெற்றிபெற்ற கட்சி | உறுப்பினர் |
|---|---|---|---|---|
| 1967 | 4வது மக்களவை | 63,286 | இந்திய தேசிய காங்கிரசு | என்.சேதுராமன் |
| 1971 | 5வது மக்களவை | 112,714 | இந்திய தேசிய காங்கிரசு | மோகன் குமாரமங்கலம் |
| 1977 | 5வது மக்களவை | 112,714 | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் | அரவிந்த பால பிரஜனர் |
| 1980 | 7வது மக்களவை | 164,589 | இந்திய தேசிய காங்கிரசு | ப. சண்முகம் |
| 1984 | 8வது மக்களவை | 159,376 | இந்திய தேசிய காங்கிரசு | ப. சண்முகம் |
| 1989 | 9வது மக்களவை | 190,562 | இந்திய தேசிய காங்கிரசு | ப. சண்முகம் |
| 1991 | 10வது மக்களவை | 207,922 | இந்திய தேசிய காங்கிரசு | எம்.ஓ.எச்.பாரூக் |
| 1996 | 11வது மக்களவை | 183,986 | இந்திய தேசிய காங்கிரசு | எம்.ஓ.எச்.பாரூக் |
| 1998 | 12வது மக்களவை | 131,348 | திராவிட முன்னேற்றக் கழகம் | எஸ்.ஆறுமுகம் |
| 1999 | 13வது மக்களவை | 165,108 | இந்திய தேசிய காங்கிரசு | எம்.ஓ.எச்.பாரூக் |
| 2004 | 14வது மக்களவை | 483,814 | பாட்டாளி மக்கள் கட்சி | பேராசிரியர் எம்.ராமதாஸ் |
| 2009 | 15வது மக்களவை | 607,948 | இந்திய தேசிய காங்கிரசு | நாராயணசாமி |
14 வது மக்களவை தேர்தல் [தொகு]
பேராசிரியர் ராமதாஸ் (பாமக) பெற்ற வாக்குகள் - 241,653
லலிதா குமாரமங்கலம் (பாரதிய ஜனதா கட்சி) பெற்ற வாக்குகள் - 172,472
வெற்றி வேறுபாடு 69,181 வாக்குகள்.
15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் [தொகு]
28 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் காங்கிரசின் நாராயணசாமி பாமகவின் பேராசிரியர் எம்.ராமதாசை 91,772 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
| வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
|---|---|---|
| நாராயணசாமி | காங்கிரசு | 300,391 |
| பேராசிரியர் ராமதாசு | பாமக | 208,619 |
| ஆசனா | தேமுதிக | 52,638 |
| எம். விஸ்வேஸ்வரன் | பாரதிய ஜனதா கட்சி | 13,442 |
| எம். சௌந்தரம் | பகுஜன் சமாஜ் கட்சி | 3,697 |