புதுச்சேரி சட்டமன்றப் பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புதுச்சேரி சட்டமன்றப் பேரவை


Puducherry Park Monument retouched.jpg

இக்கட்டுரை
புதுவை அரசு மற்றும் புதுவை அரசியல்
என்ற தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும்

புதுச்சேரி சட்டமன்றப் பேரவை (அ) புதுவை சட்டமன்றம் புதுச்சேரியின் சட்டமன்றமாகும். இது ஒர் ஓரங்க சட்டமன்றம். இதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 30. இவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களது பதவிக்காலம் ஐந்தாண்டுகள்.

இந்திய ஒன்றிய ஆட்சிப்பகுதி சட்டம், 1963[1]இன் படி இந்நடைமுறை பின்பற்றப்படுகின்றது. இப்பேரவை 16 குழுக்களை உள்ளடக்கியது.

 • புதுச்சேரி ஒன்றிய பகுதி  உள்ள மொத்த சட்டமன்ற தொகுதிகள் - 30
 • புதுவை மாவட்டம் - 23+2 (மாகி -1,ஏனாம்-1)= 25 தொகுதிகள்
 • காரைக்கால் மாவட்டம் - 5 தொகுதிகள்     

'புதுவை மாவட்டம்'

 • மண்ணாடிபேட்
 • திருபுவனை(தனி)          
 • ஊசுடு (தனி )
 • மங்களம் 
 • வில்லியனூர் 
 • உழவர்கரை
 • கதிர்காமம் 
 • இந்திரா நகர் 
 • தட்டாஞ்சாவடி 
 • காமராஜ் நகர் 
 • லாஸ்பேட்
 • காலாபேட்
 • முத்தியால்பேட் 
 • ராஜ் பவன் 
 • உப்பலம்
 • உருளையன்பேட்டை       
 • நெல்லித்தோப்பு 
 • முதலியார்பேட் 
 • அரியாங்குப்பம் 
 • மனவெளி 
 • ஏம்பலம் (தனி)
 • நெட்டபாக்கம்(தனி)
 • பாகூர் 
 • மாகி 
 • ஏனாம்

காரைக்கால் மாவட்டம் 

 • நெடுங்காடு( தனி )
 • திருநள்ளார்
 • காரைக்கால் வடக்கு
 • காரைக்கால் தெற்கு
 • நிரவி திருபட்டினம்

மேற்கோள்கள்[தொகு]

 1. இந்திய ஆட்சிப் பகுதி சட்டமன்றப் பேரவைபார்த்துப் பரணிடப்பட்ட நாள் 22.05.2009