புதுக்கவிதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

புதுக்கவிதை என்பதற்கான வரைவிலக்கணம் என்பது இன்றைய சூழலில் பல்வேறுபட்டதாகக் காணப்படுகின்றது. எனினும் இலகுவாக புதுக்கவிதை என்பது கவிதைக்குரிய மரபு, இலக்கணம் அற்ற ஒரு கவிதை முறையாக நோக்கப்படுகின்றது. மரபுக்கவிதையானது சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளைக் கொண்டு காணப்பட புதுக்கவிதை அவற்றை புறந்தள்ளியதாக புதுக்தோற்றத்துடன் காணப்படுகின்றது.

பொருளடக்கம்

[தொகு] தோற்றம்

தமிழ் இலக்கிய வளர்ச்சியும் அதனோடு கூடிய தேவையும் புதுக்கவிதைக்கு வித்திட்டது. ஆங்கிலத்தில் New Poetry, Modern Poetry என அழைக்கப்பட்ட கவிதை வடிவம் தமிழுக்கே உரிய மரபில் புதுக்கவிதையாகத் திகழ்கிறது.

[தொகு] அமைப்பு

மரபுக்கவிதை போன்று சீர், தளை, அடி, தொடை என்னும் கட்டுப்பாடுகளை கொண்டிராத ஒன்றாக புதுக்கவிதை காணப்படுகின்றது.

[தொகு] அடிவரையறை (வரி எண்ணிக்கை)

இத்தனை அடிகள்தான எழுதப்பட வேண்டும் என்ற வரையறை இல்லை.

[தொகு] அடியமைப்பு (வரியமைப்பு)

ஒவ்வொரு அடியிலும் குறிப்பிட்ட சீர்கள் இருக்க வேண்டுமென்ற வரையறை இல்லை.

[தொகு] சொற்சுருக்கம்

சொற்சுருக்கம் இருக்க வேண்டியது புதுக்கவிதைக்கான முக்கிய அம்சம்.

[தொகு] ஒலிநயம்

பேச்சுவழக்குச் சொற்களிடையே ஒலிநயம் காணப்படுவது பொதுவானது.

[தொகு] சொல்லாட்சி

சொற்கள் சிறப்பாகப் பயன்படுத்தப்படுவதும் வடமொழி, ஆங்கிலம், பேச்சுவழக்குச் சார்ந்த சொற்களுக்கும் பாவிக்கப்படுகிறது.

[தொகு] தொடை நயம்

எதுகை, மோனை, இயைபு என்னும் தொடை நயங்களெல்லாம் கட்டாயம் என்ற நிலையில்லை

[தொகு] யாப்புச் சாயல் மற்றும் நாட்டுப்புறச் சாயல்

அடிவரையறை செய்து எழுதும்போது மரபுக்கவிதை போன்று தோற்றமளிக்கும்.

[தொகு] வசன நடை மற்றும் உரையாடல் பாங்கு

வசன நடையும் உரையாடல் பாங்கும் சிறப்பாக எளிய முறையில் பாவிக்கப்படும்.

[தொகு] வெளியிணைப்புக்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=புதுக்கவிதை&oldid=961328" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி