புதிய வானம் (நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதிய வானம்
நூலாசிரியர்வாஸந்தி
நாடுஇந்தியா
மொழிதமிழ் மொழி
வெளியீட்டாளர்கவிதா பப்ளிகேஷன்
வெளியிடப்பட்ட நாள்
முதல் பதிப்பு டிசம்பர் 2008
பக்கங்கள்112
ISBNISBN 978-81-8345-089-8

புதிய வானம் [1] இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப்பிரதேசத்தை மையப்படுத்தி எழுத்தாளர் வாஸந்தி எழுதியுள்ள புதினமாகும்.

நூலின் உள்ளடக்கம்[தொகு]

அருணாசலப் பிரதேச எல்லைக்குள் நுழையும் கதைநாயகிகள் பூர்ணிமா, மீரா இவர்கள் சந்திக்கும் பரபரப்பான சூழலில் இருந்து கதை ஆரம்பிக்கிறது.

கதையின் நாயகன் தன்ரூபலாமா (ரூபா) இவர்களுக்கு உதவும் சூழ்நிலைகளையும், அவனது குடும்பம், அவனது சமுதாயச் சூழல் ஆகியவற்றையும் சித்திரித்துள்ளார் ஆசிரியர். செயற்கையான புதுடில்லி வாழ்க்கையிலிருந்து புதிய சூழலில் புதிய காற்றைச் சுவாசிக்கச் செல்லும் இரு தோழிகளுக்கும் அடுத்தடுத்து ஏற்படும் குடும்பச் சிக்கல்கள், அவற்றை சமாளிக்கும் விதம் கதைக்கு வலுவாக உள்ளது.

கதையின் நாயகியரில் ஒருத்தியான பூர்ணிமா டில்லி வாசத்தை மறந்து தரைமட்டத்திலிருந்து ஒன்பதாயிரம் அடி உயரத்தில் உள்ள அருணாசலப் பிரதேச பொம்டில்லா கிராமத்தின்பால் ஈர்க்கப்படுவதை சொல்லும் விதத்தில், கதையின் அடிநாதமாக, அருணாச்சலப்பிரதேசம் போன்ற பழங்குடியின சமுதாயத்தினர் வாழும் இடங்களுக்கு அனுப்பப்படும் அலுவலர்களையும், காவற்துறையினரையும், இராணுவ வீரர்களையும் மிகக் கவனமாக பொறுக்கியெடுத்து அனுப்ப வேண்டிய அவசியத்தையும், அடிப்படை மனிதாபமான உணர்வு நசிந்து போனால் வேறு முயற்சிகள் பலனளிக்காது என்ற கருத்தையும் உணர்த்துகிறார்.

நாகரீக மனிதர்கள் என்று வெளி உலகில் பெயர் வாங்கும் ஒரு சில மனிதர்களின் போலி நாகரீகத்தையும், அவர்களது அநாகரீகத்தால் பாதிக்கப்படும் பழங்குடி மக்கள் ஆயுதம் தூக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறார். இப் புதினத்தின் வாயிலாக யார் உண்மையிலேயே நாகரீகமான மக்கள் என்ற கேள்வியினை எழுப்புகிறார் ஆசிரியர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. புதிய வானம் - கவிதா பப்ளிகேஷன்’ ISBN 978-81-8345-089-8
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_வானம்_(நூல்)&oldid=2697865" இலிருந்து மீள்விக்கப்பட்டது