புணே மண்டலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புணே மண்டலம் மகாராட்டிரம், நீல வண்ணத்தில்.
புணே மண்டலம்[தொகு]
இது இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தின் ஏழு மண்டலங்களில் ஒன்றாகும். இந்த மண்டலத்தின் எல்லைகளாக மேற்கில் கொங்கண் மண்டலமும், வடக்கே நாசிக் மண்டலமும், கிழக்கே ஔரங்காபாத் மண்டலம் (மராத்வாடா)வும், தெற்கே கர்நாடகமாநிலமும் அமைந்துள்ளன.
சில புள்ளிவிவரங்கள்[தொகு]
- பரப்பளவு: 58,268 கிமீ²
- மக்கட்தொகை (2001 கணக்கெடுப்பு): 19,973,761
- மாவட்டங்கள்: கோலாப்பூர், புணே, சாங்கிலி, சோலாப்பூர்
- படிப்பறிவு: 76.95%
- பாசன பரப்பு: 8,896 கிமீ²
- முக்கியப் பயிர்கள்: சோளம்,கம்பு,கரும்பு,கோதுமை,அரிசி,சோயா, வெங்காயம், நிலக்கடலை, காய்கறிகள், மஞ்சள், திராட்சை, மாதுளை
வரலாறு[தொகு]
இந்திய விடுதலைக்குப் பின்னரும் மகாராட்டிரம் உருவானபின்னரும் மாவட்டங்களின் பெயர்களில் மாற்றமும் சில சேர்க்கைகளும் உண்டாயின. சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்:
- முந்தைய சிற்றரசுகளான மீரஜ்,ஔந்த்,சாங்க்லி,டஸ்காவ்ன் மற்றும் குருந்த்வாட் இவற்றை இணைத்து புதிய சாங்கிலி மாவட்டம் உருவானது.
- பூனா என அழைக்கப்பட்ட மாவட்டப பெயரை புணே என மாற்றியது.
- தற்போதைய சோலாப்பூர் மாவட்டத்திலிருந்து சில பகுதிகள் பிரிக்கப்பட்டு பந்தர்பூர் மாவட்டம் உருவாக்க திட்டமுள்ளது.
- தற்போதைய புணே மாவட்டத்திலிருந்து கிழக்கு பகுதிகளான சிரூர்,புரண்டர்,தௌண்ட்,பராமதி மற்றும் இந்தாப்பூர் தாலுக்காக்கள் பிரிக்கப்பட்டு புதிய பராமதி மாவட்டம் உருவாக்க திட்டமுள்ளது.