புணர்ச்சி (இலக்கணம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புணர்ச்சி அல்லது சந்தி (சமஸ்கிருதம்: saṃdhi, ஆங்கிலம்: sandhi, "சேர்த்தல்") என்பது இரண்டு வார்த்தைகள் இணையும்போது உச்சரிப்பில் உண்டாகும் மாற்றமாகும். இவை இந்திய மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழிகளில் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால் இந்த உச்சரிப்பு மாற்றம் எந்த ஒரு மொழியிலும் இயற்கையாக நிகழும். பெரும்பாலான மொழிகளில் எழுத்து வடிவம், சந்தியைப் பயன்படுத்துவதில்லை. ஆனால் தமிழ் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் எழுத்து இலக்கணத்தில் சந்தி ஒரு விதிமுறையாக உள்ளது.