புணர்ச்சிப் பரவசநிலையின்மை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புணர்ச்சிப் பரவசநிலையின்மை
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஉளநோய் மருத்துவம், counselling, clinical psychology, மகளிர் நலவியல்
ஐ.சி.டி.-10F52.3
ஐ.சி.டி.-9302.73, 302.74
நோய்களின் தரவுத்தளம்23879
ஈமெடிசின்article/295376 article/295379

புணர்ச்சிப் பரவச நிலையின்மை (Anorgasmia) என்பது போதுமான தூண்டல் தரப்பட்டும் புணர்ச்சியின் போது பரவசநிலையை எய்த இயலாமை ஆகும். இது மனநல நோய்களுள் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டாலும் பெரும்பாலும் இது மருத்துவ காரணங்களாலேயே (medical causes) உண்டாகிறது.

முதல் நிலை பரவசமின்மை[தொகு]

வாழ்நாளில் ஒரு முறை கூட உச்ச கட்டமாகிய பரவச நிலையை எய்தாதவர்கள். பெண்களில் அதிகம் காணப்படும் இது ஆண்களில் அதுவும் இளம் ஆண்களில் மிக அரிதான ஒன்று.

இரண்டாம் நிலை பரவசமின்மை[தொகு]

இவர்கள் முன்னம் பரவசநிலை அனுபவித்தவர்கள். சில காரணங்களால் தற்போது அனுபவிக்க இயலாதவர்கள்.

காரணங்கள்[தொகு]

சூழ்நிலை பரவசமின்மை[தொகு]

இவர்கள் சில குறிப்பிட்ட சூழல்களில் (situational) மட்டும் பரவசமெய்த இயலாதவர்கள். எடுத்துக்காட்டாக சில ஆண்கள் (quad honc) மனைவியைத் தவிர பிற பெண்களிடம் பரவசமெய்துவார்கள்.