புடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
Pudu 普渡 |
|
|---|---|
| புடுராயா பேருந்து நிலையம் | |
| Location in Malaysia | |
| அமைவு: | |
| நாடு | |
| மாநிலம் | |
| நகரத் தோற்றம் | 1880 |
| மாநகரத் தகுதி | 01.02.1972 |
| அரசு | |
| - கோலாலம்பூர் மாநகர மேயர் | அகமட் புவாட் இஸ்மாயில் |
| நேர வலயம் | MST (ஒ.ச.நே.+8) |
| - கோடைகாலம் (ப.சே.நே.) |
கண்காணிப்பு இல்லை (ஒ.ச.நே.) |
| அஞ்சல் குறியீடு | 5xxxx |
| அனைத்துலக முன்னொட்டுக் குறி | +60 |
|
|
|
| இணையத்தளம்: http://www.dbkl.gov.my | |
புடு (Pudu) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில் உள்ள ஒரு நகரப் பகுதியாகும். இந்த நகரப் பகுதி புடு சாலையில் இருக்கிறது. இங்கு கோலாலம்பூரின் மிகப் பழமையான பேருந்து நிலையம் உள்ளது. அங்கு இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் புடு சிறைச்சாலை இருந்தது. 1895-இல் கட்டப்பட்ட அந்தச் சிறைச்சாலை 2010 ஜுன் மாதம் தகர்க்கப்பட்டது.[1] கோலாலம்பூரில் பெரிய காய்கறிச் சந்தையும் புடுவில் தான் உள்ளது.
புடுவிற்கு அருகாமையில் புகழ்பெற்ற புக்கிட் பிந்தாங் வணிக மையம் உள்ளது. இங்கு மின்சாதனங்கள், கணினிகள், ஆடை அணிகலன்கள், மேற்கத்திய உணவுப் பொருட்கள் போன்றவை 24 மணி நேரமும் கிடைக்கின்றன. இங்கு தான் உலகப் புகழ்பெற்ற பெட்ரோனாஸ் இரட்டைக் கோபுர வானளாவிகள் உள்ளன.