புங்குடுதீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புங்குடுதீவு
Gislanka locator.svg
Red pog.svg
புங்குடுதீவு
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9.581165° N 79.829877° E
கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)

புங்குடுதீவு (Pungudutivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். யாழ் நகரில் இருந்து செல்லும் 18 மைல் நீளமுள்ள பெருஞ்சாலையின் மூலம் இத்தீவு யாழ்நகருடன் இணைக்கப்பட்டுள்ளது. குடாக்கள், முனைகள் என்பன அமையப்பெற்ற இத்தீவின் சுற்றளவு 21 மைல்கள் ஆகும். இது கிழக்கு மேற்காக 5.5 மைல் நீளமும், வடக்கு தெற்காக 3 மைல் அகலமும் கொண்டு தோற்றமளிக்கின்றது.

இத்தீவானது வேலணை வாணர் பாலத்தினால் இணைக்கப்பட்டதன் மூலம் இங்குவாழும் மக்கள் பெரும் பயனைப் பெற்றுள்ளார்கள். குறிகட்டுவான், கழுதைப்பிட்டி போன்ற துறைகள் மூலம் மற்றைய தீவுகளுடனான தொடர்புகளைக் கொண்டுள்ளது. இங்கு சிறிதளவு விவசாயமும் கால்நடை வளர்ப்பும் கடல் வளத்தின் மூலம் மீன்பிடியும் சிறப்பாக நடைபெறுகின்றன.

பொருளடக்கம்

[தொகு] புவியியல்

புங்குடுதீவு ஏனைய தீவுகளால் சூழப்பட்டுள்ளதுடன் 11.2 சதுர மைல் பரப்பளவினைக் கொண்டுள்ளது. பாய்க்கப்பலின் உருவத்தினைப் போன்ற நிலத்தோற்றத்தைக் கொண்டுள்ள இத்தீவு யாழ்ப்பாண நகரத்திலிருந்து 15 மைல் தொலைவில் அமைந்துள்ளதுடன் வேலணைத் தீவிலிருந்து ஆழம் குறைந்த 3 மைல் கடற்பரப்பினாற் பிரிக்கப்பட்டுள்ளது. இத்தீவின் பிரதான நிலப்பரப்பு தவிர்ந்த ஊரதீவு, பல்லதீவு, கேரதீவு போன்ற சிறு தீவுகள் மழைக்காலங்களில் நீரினால் பிரிக்கப்பட்டும் கோடை காலங்களில் இணைந்தும் காணப்படுகின்றது.

இத்தீவின் தென்கிழக்கே வீராமலைப்பகுதி உயரம் கூடிய பிரதேசமாகவும் வடமேற்கு நோக்கி படிப்படியாகத் தாழ்ந்து செல்கிறது. மாரி காலங்களில் வீராமலைப் பகுதி மற்றும் அதன் அயற் பகுதிகளிலிருந்தும் நீர் வழிந்தோடி கள்ளியாற்றுடன் சேருவதைக் காணலாம். இத்தீவின் தென்பகுதி உயரம் கூடியதாகவும் வடபகுதி தாழ்ந்ததாகவும் இருப்பதுடன் கேரதீவைச் சார்ந்த பகுதிகள் சதுப்பு நிலத்தை ஒத்த பண்புகளைக் கொண்டதாகவுள்ளன.

பொதுவாக இத்தீவின் சராசரி வெப்பநிலை 80 பாகை பரனைற்றாகவும் ஆண்டு மழைவீழ்ச்சி 50 அங்குலத்திற்கும் குறைவாக இருப்பதனாலும் வளம் குறைந்த நரை மண் தொகுதியே பெரும்பாலான பகுதிகளில் சிப்பி கலந்த மண், களிமண், ஊரிகலந்த மண், கொழுக்கிக்கல் கலந்த மண் என்பன காணப்படுகின்றன. இத்தீவின் நீர் வளத்தினைப் பொறுத்தவரை 68.0 சதவீதமான கிணறுகளில் உவர்த்தன்மை கொண்ட நீரே காணப்படுகின்றன. நன்னீர் வளம் ஆங்காங்கே காணப்படுகின்றது.

[தொகு] வரலாறு

புங்குடுதீவுக் கிராமத்தின் வரலாறு தீவகத்தின் வரலாற்றுடன் மட்டுமல்லாது, யாழ்ப்பாணக் குடாநாட்டுடனும் தென்னிந்தியாவுடனும் நெருங்கிய தொடர்பினைக் கொண்டிருக்கின்றது. வளவாய்ப்புகளைக் கொண்ட யாழ்ப்பாணக்குடா நாட்டுக்கும் தென்னிந்தியாவிற்கும் இடையிலான மக்கள் போக்குவரத்தில் தீவுப்பகுதி உட்பட புங்குடுதீவு முக்கிய இடத்தில் அமைந்துள்ளமை தென்னிந்திய மக்களின் உள்வரவுக்கு உதவியிருக்கலாம்.

குறிப்பாக காலத்துக்குக் காலம் தென்னிந்தியாவில் ஏற்பட்டுள்ள பௌதீக மற்றும் அரசியல் மாற்றங்களால் மக்கள் இப்பகுதிகளில் வந்து வாழ்ந்திருக்க நியாயம் உண்டு. அதாவது தென்னிந்தியாவிலிருந்து வந்துள்ள மக்களின் வழித்தோன்றல்கள் பற்றி காலத்திற்குக் காலம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

[தொகு] பெயர்க்காரணம்

புங்குடுதீவின் வரைபடம்

புங்குடுதீவு என்ற பெயர் தோன்றியமைக்கு பல்வேறு விளக்கங்கள் கூறப்படுகின்றன. புங்குடுதீவு புளியடித்துறை என்ற தற்போது பயன்படுத்தப்படாத துறைமுகத்திற்கு அருகாமையில் பெருக்கு மரங்கள் காணப்படுகின்றன. இம்மரங்கள் அராபியரால் அறிமுகப்படுத்தப்பட்டன என்பர். எனவே அராபியர் இத்தீவுக்கு வந்து வணிகத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்[மேற்கோள் தேவை]. வல்லிபுரத்தில் கண்டு எடுக்கப்பட்ட சாசனத்தில் பியாங்கு தீபம் பற்றி குறிப்பிட்டுள்ளது. தற்போதைய புங்குடுதீவையே முன்னர் பியாங்கு என அழைக்கப்பட்டுள்ளது என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். பியாங்குச் செடிகள் அதிகமாக காணப்பட்டிருந்தமையால் பியாங்குதீபம் என அழைக்கப்பட்டிருந்த இத்தீவு காலப்போக்கில் பியாங்குதீவு எனவும் பின்னர் புங்குடுதீவு எனவும் மருவியதாக கொள்ள இடம் உண்டு[மேற்கோள் தேவை]. தமிழ்நாட்டு மக்களின் தொடர்பு காணப்பட்டிருந்தமையால் அங்குள்ள புங்கநூர் குடி என்ற இடப்பெயர்வு இத்தீவுக்கு அவர்களால் சூட்டப்பட்டிருக்கலாம்[மேற்கோள் தேவை].

தென்னிந்தியாவுடன் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றமையால் புங்குடுதீவில் சோழனோடை, சோழம்புலம், பல்லதீவு போன்ற இடப்பெயர்கள் அவர்களால் இடப்பட்டிருக்கலாம் எனக் கொள்ள இடமுண்டு.

அக்காலத்தில் புங்கை மரம் நிறைந்த காடாக இவ்விடம் இருந்தமையால் புங்குடுதீவு என பெயர் பெற்றதாக கதைகள் உண்டு. தமிழ்நாட்டில் உள்ள ‘புங்குடி’ என்னும் ஊர்ப் பெயரை புங்குடுதீவுடன் தொடர்பு படுத்தி பெயர் விளக்கம் கூறப்படுவது முண்டு. மேலும் இசுலாமியரின் படையெடுப்பு தமிழகத்தில் ஏற்பட்டபோது அங்குள்ள பூங்குடி ஊரினர் படையெடுப்பாளர்களது கொடுமையில் இருந்து தமது கன்னிப் பெண்களை பாதுகாக்க வேண்டிய அவல நிலையில் இங்கு தப்பி ஓடிவந்து குடியேறியதால் இத்தீவுக்கு ‘பூங்கொடி’ ‘திருப்பூங்கொடி’ எனும் பெயர்களை பெற்றதாயிற்று என்பர். இந்த வகையில் பூங்கொடித் தீவு என வழங்கி அது காலப்போக்கில் புங்குடுதீவு என மருவியதாயிற்று என்பர்[1]. ஐரோப்பியர் ஆட்சிக்காலத்தில் குறிப்பாக போர்த்துக்கீசர் இத்தீவுக்கு கொங்கரடிவா எனவும் ஒல்லாந்தர் மிடில்பேக் எனவும் பெயரிட்டு அழைத்துள்ளனர். இத்தீவானது ஏனைய தீவுகளுக்கு நடுநிலையாகக் காணப்பட்டமையால் ஒல்லாந்தர் இதற்கு ‘மிடில்பேர்க்’ எனப் பெயரிட்டனர் என்பர்.

மேலும் ஒல்லாந்தரால் கடலில் குளித்தெடுத்த சங்குகளை கொண்டுவந்து பதம்பிரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட இடமாகவும் இது அமைவு பெற்று விளங்குகின்றது. இதனால் இதற்கு சங்குமாவடி என்று பெயர் பெற்றிருக்கலாம் என அறிஞர்கள் கருதுகின்றனர்[1].

[தொகு] மக்கள் பரம்பல்

1981ம் ஆண்டுக் குடித்தொகைக் கணிப்பீட்டின்படி 14 622 மக்கள் வாழ்ந்திருந்தனர். 1991ம் ஆண்டு 17000 மக்கள் வாழ்ந்துள்ளனர் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

[தொகு] துறைமுகங்கள்

இங்கு புளியடித்துறை, கழுதைப்பிட்டித்துறை, குறிகட்டுவான் துறை, மடத்துவெளித் துறை எனும் நான்கு துறைகள் காணப்படுகின்றன. ‘கோரியா’ என்ற இடத்தில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட வெளிச்சவீடு ஒன்று அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பெருங் கப்பல்களும், செழித்த வாணிபமும் அக்காலத்தில் இருந்தமையால் நடுக் கடலில் கப்பல்கள் சென்று திரியும் இராக் காலத்திலே கப்பல்கள் திசை மாறாது கரையை சேர்வதற்கு துணையாக கடற்கரைப் பட்டினத்தில் 35 அடி உயரமுடையதாக இவ்வெளிச்ச வீட்டை அமைத்துள்ளனர். இவ்வெளிச்ச வீடு 5 செக்கனுக்கு ஒருமுறை விட்டு விட்டு ஒளிரும் வெள்ளை ஒளியை வீசும் வண்ணம் அமைந்து காணப்படுகின்றது[1].

[தொகு] கிராம சேவையாளர் இலக்கமும் கிராம சேவையாளர் பிரிவும்

  • யா/22 புங்குடுதீவு வடகிழக்கு
  • யா/23 புங்குடுதீவு கிழக்கு
  • யா/24 புங்குடுதீவு தென் கிழக்கு
  • யா/25 புங்குடுதீவு கிழக்கு மேற்கு
  • யா/26 புங்குடுதீவு தெற்கு
  • யா/27 புங்குடுதீவு வடக்கு
  • யா/28 புங்குடுதீவு வடமத்தி
  • யா/29 புங்குடுதீவு தென் மேற்கு
  • யா/30 புங்குடுதீவு மத்தி மேற்கு
  • யா/31 புங்குடுதீவு மத்தி கிழக்கு
  • யா/32 புங்குடுதீவு வட மேற்கு
  • யா/33 புங்குடுதீவு மேற்கு

[தொகு] புங்குடுதீவில் உள்ள கிராமங்கள்

  • பழையதுறை
  • வாண்டயாவெளி
  • பள்ளக்காடு
  • மேற்குதிக்கு
  • கம்பிலியன்
  • சங்குமாலடி
  • நல்லாந்திட்டு
  • திகழி
  • போக்கத்தை
  • திவாணிபுலம்
  • மடத்துகாடு
  • பொன்னான்தொட்டம்
  • மாநாவெள்ளை
  • தல்லமி
  • புளியடி
  • தனிப்பனை
  • புட்டிவயல்
  • கரந்தல்லி
  • வாடை
  • வீரம்புளியடி
  • மானொழுவம்
  • அரியநாயகன்புலம்
  • கண்டல்கட்டி
  • புட்டுனி
  • விழாக்கண்டல்
  • தொட்டம்
  • சங்கத்தாகேணி
  • கோரையடி
  • தெங்கந்திடல்
  • முனியப்புலம்
  • மணற்காடு
  • சிவலைபிட்டி
  • மாக்கொண்டல்
  • மனியாரந்தோட்டம்
  • தொழிலாளர்புரம்
  • சோழகனோடை
  • கள்ளியாறு
  • பெரிய கண்ணாதீவு
  • சின்ன கண்ணாதீவு
  • நாயத்தன்காடு
  • ஈச்சங்குண்டு
  • பண்ணைப்புலம்
  • முற்றவெளி
  • தல்லையப்பற்று
  • பெரியகிராய்
  • நடுக்குறிச்சி
  • புளியடித்துறை
  • அடைக்காத்தகுளம்
  • தூண்டி
  • இழுப்பனை
  • கொம்மாபிட்டி
  • கிராஞ்சி
  • ஊரதீவு
  • மடத்துவெளி
  • வரதீவு
  • வல்லன்
  • மாவுதிடல்
  • வீராமலை
  • கிழக்கூர்
  • குறிச்சிகாடு
  • கண்ணகிபுரம்
  • கோட்டைக்காடு
  • ஆலடி
  • சந்தையடி
  • பெருங்காடு
  • சங்கத்தாகேணி
  • நடுவுதுருத்தி
  • குறிகட்டுவான்
  • சின்ன இறுபிட்டி
  • இறுபிட்டி
  • கழுதைபிட்டி
  • கேரதீவு
  • நுணுக்கல்

[தொகு] புங்குடுதீவில் உள்ள குளங்கள்

  • வெள்ளைக்குளம்
  • தில்லங்குளம்
  • அறியாரிகுளம்
  • முருகன்கோவில்குளம்
  • நாகதம்பிரான்குளம்
  • ஆமைக்குளம்
  • திகழிக்குளம்
  • பெரியகிராய்
  • மக்கிகுண்டு
  • நக்கந்தைகுளம்
  • தர்மக்குண்டு
  • புட்டுனிகுளம்
  • வேட்டுகுளம்
  • கண்ணகி அம்மன்தெப்பகுளம்
  • கண்ணகி அம்மன் குளம்
  • சந்தையடி குளம்
  • கந்தசாமிகோவில்குளம்
  • விசுவாமிதிரன்குளம்
  • மாரியம்மன்கோவில்குளம்

[தொகு] அரச பொது நிறுவனங்கள்

  • பிரதேச வைத்தியசாலை, புங்குடுதீவு
  • தபாலகம் சந்தை உபதபாலகம்
  • ஊரதீவு உபதபாலகம்
  • வல்லன் உபதபாலகம்
  • தட்டையன்புலம் உபதபாலகம்
  • குறிகாட்டுவான் உபதபாலகம்
  • இருபிட்டி பொதுநூலகம்
  • சந்தை பொது வைத்தியசாலை
  • ஊரதீவு வெளிநோயாளர் நிலையம்
  • இருபிட்டி வெளிநோயாளர் நிலையம்
  • மக்கள் வங்கி
  • கிராமிய வங்கி
  • பலநோக்கு கூட்டுறவு சங்கம் -சந்தை (புங்குடுதீவு-நயினாதீவு)

[தொகு] துறைமுகங்கள்

  • குறிகட்டுவான் துறைமுகம்
  • கழுதைப்பிட்டி துறைமுகம்
  • பழையதுறை நுழைவாயில் (வாணர் தாம்போதி)
  • கோரியாவடி கலங்கரை விளக்கம்

[தொகு] கோயில்கள்

  • ஊரதீவு பாணாவிடை சிவன் கோவில்
  • மடத்துவெளி பாலசுப்பிரமணியர் ஆலயம்
  • மடத்துவெளி வீரகத்தி விநாயகர் ஆலயம்
  • வல்லன் திருபெருந்துறை நாகதம்பிரான் ஆலயம்
  • வல்லன் இலுபெண்ணை நாச்சிமார் கோவில்
  • வல்லன் ஹரிஹர புத்திர ஐயனார் கோவில்
  • கோரியாவடி நாயம்மா கோவில்
  • புங்குடுதீவு கண்ணகை அம்மன் கோவில்
  • கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயம்
  • தல்லையபற்று முருகமூர்த்தி கோவில்
  • சந்தையடி வீரகத்தி விநாயகர் கோவில்
  • கந்தசாமி கோவில்
  • குறிகட்டுவான் மனோன்மணி அம்பால் கோவில் (பேச்சியம்மன் )
  • ஸ்ரீ முத்துமாரி அம்பாள் ஆலயம்
  • மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் (சிவன் கோவில்
  • ஸ்ரீ காளிகா பரமேஸ்வரி ஆலயம் வீரகத்தி விநாயகர் ஆலயம் -அரியநாயகன்புலம்
  • பெரியபுலம் வீரகத்தி விநாயகர் கோவில்
  • பெருங்காடு புரட்டஸ்தாந்து தேவஸ்தானம்
  • புனித சவேரியார் கோவில் ([1])
  • புனித அந்தோனியார் ஆலயம்
  • நாச்சிமார் அம்மன் கோவில் (புட்டி வேல்)

[தொகு] பாடசாலைகள்

  • அரியநாயகன்புலம் A.M.T.M.S
  • துரைசுவாமி வித்தியாலயம்
  • இறுப்பிட்டி A.M.T.M.S
  • கமலாம்பிகை வித்தியாலயம்
  • குறிகாட்டுவான் G.T.M.S.
  • பராசக்தி வித்தியாலயம்

* புங்குடுதீவு மகா வித்தியாலயம்

  • புங்குடுதீவு R.C.T.M.S.
  • புங்குடுதீவு மேற்கு A.M.T.M.S.
  • ராஜராஜேசுவரி வித்தியாலயம்

* சிறீ கணேசா மகா வித்தியாலயம்

  • சிறீ சண்முகநாத வித்தியாலயம்
  • சிறீ சுப்பிரமணிய மகா வித்தியாலயம்
  • சிறீ சித்திவிநாயகர் மகா வித்தியாலயம்
  • திருநாவுக்கரசு வித்தியாலயம்

[தொகு] இங்கு வாழ்ந்த பெரியோர்கள்

  • வ. பசுபதிப்பிள்ளை, விதானையார்
  • பொன.கனகசபை --வித்துவான் -ஆன்மிகம்
  • சி.ஆறுமுகம் --வித்துவான் - கல்வி
  • என்.எ.வைத்திலிங்கம் -பொறியியல் நிபுணர்
  • சு-வில்வரத்தினம் அதிபர்- கல்வி
  • க.செல்வரத்தினம் அதிபர் -கல்வி இலக்கியம் கலை
  • ப.கதிரவேலு- வழக்கறிஞர் -அரசியல்
  • கணபதிபிள்ளை கந்தையா --அதிபர்-கல்வி -சமூகசேவை
  • க.செல்லத்துரை -மு.கி.ச.தலைவர்
  • சி.கணபதிபிள்ளை- வைத்திய விற்பன்னர்
  • பேராயர் டேவிட் ஜெயரத்தினம் அம்பலவாணர்
  • சி.இ.சதாசிவம்பிள்ளை -கல்வி
  • சி.சரவணமுத்துசுவாமிகள் -சிவதொண்டர்
  • பண்டிதர் சி.சரவணார் -ஆன்மீக போதகர்
  • கு.வி.செல்லத்துரை - அதிபர்-மு.தலைவர்-அகில இ.தா.ஆ.சங்கம்
  • மா.முருகேசு -உடையார்
  • க.ஐயாத்துரை- கல்வி-ஆன்மிகம் -சமூகசேவை
  • பே-கார்த்திகேசு - கி.ச.உபதலைவர் .இருபஈட்டி.ச.ச.நி.ஸ்தாபகர்
  • வி.கே.குணரத்தினம் வைத்தியர்
  • நா.கணேசராசகுருக்கள்---சமயம்
  • சே.சிவசுப்ரமனியாகுருக்கள்-சமயம்
  • க.முத்துதம்பி -அதிபர்-கல்வி
  • கு.வி.தம்பிதுரை மு-கி-ச-தலைவர்
  • க.தாமோதரம்பிள்ளை- கல்வி-சங்கீதம்
  • தம்பிப்பிள்ளை -வைத்தியர்
  • எ-குழந்தைவேலு -சமூகசேவை-ஆன்மிகம்
  • இராமச்சந்திர ஐயர் -சமயம்
  • மார்கண்டு சோதிநாதர்--ஆன்மிகம்
  • இ.கேங்கதரகுருக்கள்-சமயம்
  • சு.பரராசசிங்கம்- சமூகசேவை அரசியல்
  • வீ.வ.நல்லதம்பி-அதிபர்-கல்வி-அரசியல்
  • நாக-பத்மநாதன்- எழுத்தாளர்
  • க.ஸ்ரீஸ்கந்தராசா --எழுத்தாளர் (சித்ரா மணாளன்
  • சி.க.நாகேசு -சமூகசேவை அரசியல்
  • போ.நாகேசு-சமூகசேவை -அரசியல்
  • சி.சின்னதுரை -கல்வி
  • க.சிவராமலிங்கம்- அதிபர்-கல்வி-இலக்கியம் கலை
  • இ.குலசேகரம்பிள்ளை -கல்வி-சமூகசேவை

[தொகு] மேற்கோள்கள்

  • கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
  • சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
  • செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.
  • சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா.
  • இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=புங்குடுதீவு&oldid=1039031" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்