புங்காட்டுவலசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புங்காட்டுவலசு
—  நகரம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் ஈரோடு
ஆளுநர் ஆர். என். ரவி
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்
புங்காட்டுவலசில் நெற்பயிர் வயலின் பசுமை தோற்றம்

புங்காட்டுவலசு (Punkattuvalasu), தமிழ் நாட்டில் ஈரோடு மாவட்டத்திலுள்ள மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் வரும் துய்யம்பூந்துறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பசுமை நிறைந்த அழகிய ஊர். இங்கு வேளாண்மை முக்கிய தொழில் ஆகும். இவ்வூர் கீழ் பவானி திட்ட கால்வாய் மூலம் நீர் பாசன வசதி பெறுகிறது. இது ஈரோட்டில் இருந்து தெற்கே 15 கிமீ தொலைவில் அவல்பூந்துறைக்கு மேற்கே 1 கிமீ தொலைவில் உள்ளது. இதன் அருகே அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைந்து உள்ளது. இது கொப்பரை தேங்காய் விற்பனைக்கு தமிழக அளவில் பெயர் பெற்ற சந்தைக்கூடம் ஆகும்.

புங்காட்டுவலசுக்கு அஞ்சல் ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை வழி, துய்யம்பூந்துறை அஞ்சல் நிலையம் வழி வருகின்றது. இவ்வூரின் அஞ்சல் குறியீட்டு எண் 638115. தொலைபேசி குறியீடு 0424.

இவ்வூர் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதி மொடக்குறிச்சி. இது ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிப் பிரிவில் உள்ளது.

ஊர் பெயர்க் காரணம்[தொகு]

இந்தக் கிராமத்தில் முந்தய காலங்களில் புங்க மரங்கள் ஊர் முழுவதும் அதிகம் பரவி இருந்ததால் புங்காட்டுவலசு என்ற பெயர் அமைந்தது .

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புங்காட்டுவலசு&oldid=3813790" இலிருந்து மீள்விக்கப்பட்டது