புகை போக்கி விளக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மண்ணெண்ணெய் திரி விளக்கு

புகை போக்கி விளக்கு என்பது மின்சாரப் பயன்பாடு இல்லாத காலங்களில் பயன்படுத்தப்பட்ட ஒரு மண்ணெண்ணெய் விளக்காகும். இந்த விளக்கின் கீழ் பகுதியில் மண்ணெண்ணெய் நிரப்பி வைத்துக் கொள்வதற்கான பகுதியுள்ளது. இதன் மேல்பகுதி கீழ்பகுதியை மூடிக் கொள்ளும்படியாகவும், இதன் மையப் பகுதியில் விளக்கு எரிவதற்கான திரியும், இந்தத் திரியினை மேலும் கீழும் ஏற்றி இறக்கிக் கொள்வதற்கான வசதியுடனும் அமைக்கப்பட்டிருக்கும். இதன் மேற்பகுதியில் காற்றில் எரியும் திரி அணைந்து விடாமலிருக்கவும், வெளிச்சத்தைப் பரவலாக அளிக்கும் வழியிலும் கண்ணாடிக் குடுவை ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=புகை_போக்கி_விளக்கு&oldid=974451" இருந்து மீள்விக்கப்பட்டது