திருக்கை வழக்கம் (புகழேந்தி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(புகழேந்தியார் பாடிய திருக்கை வழக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

திருக்கை வழக்கம் என்பது, புகழேந்திப் புலவரால் செங்குந்தர் மரபினரைப் பற்றி எழுதப்பட்ட நூலாகும்.[1]

பெயர் விளக்கம்[தொகு]

திருக்கை என்பது அழகிய கை எனவும், தெய்வத் தன்மை பொருந்திய கை எனவும் பொருள்படும். முருகப் பெருமானுக்குத் துணைவராக வந்த நவவீரர்களாகிய வீரவாகு தேவர் முதலியோர் வழிவந்தவர்கள் செங்குந்தர்கைக்கோள முதலியார் குலப் பெருமக்கள் என்பதால் அவர்கள் கை, திருக்கை எனப்பட்டது. அவர்களுடைய இயல்புகளையும், பழக்க வழக்கங்களையும் புகழ்ந்து கூறுகிறது இந்நூல்.

நூல் சிறப்பு[தொகு]

இந்நூலில், முருகப் பெருமான், வீரவாகுதேவர் முதலியோர் செய்த செயல்களும், செங்குந்தர்களின் செயல்களாகவேக் கூறப்படுகிறது. இந்நூல் கலிவெண்பாவில் இயற்றப்பட்ட நூலாகும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, காஞ்சி சிறீ நாகலிங்க முனிவர், 1926.