பி. கிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. கிருஷ்ணன் (பிறப்பு மார்ச்சு 6 1947) மலேசியா எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் மருந்தக உதவியாளராகப் பணியாற்றி வருகின்றார். எழுத்துத் துறையில் இவர் நாணல் எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு[தொகு]

1973 முதல் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். கூடுதலாக சிறுகதைகள், கவிதைகள் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவரின் ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டின் இதயகீதம் இலக்கிய இயக்கம் வெளியிடும் கவிதைத் தொகுப்பில் இவர் கவிதை சிறப்பிடம் பெற்றுள்ளது. மேலும் இவர் சமயச் சொற்பொழிவாளர், ஆழ்நிலைத் தியானம் பயிற்றுநர்

பரிசுகளும் விருதுகளும்[தொகு]

  • மலேசியத் தமிழ் பாவலர் மன்றம் பணமுடிப்பு வழங்கியுள்ளது. .
  • அரசாங்கம் சிறந்த சேவையாளர் விருதான PPC விருதும் (1995), PIS விருதும் (2001) வழங்கியுள்ளது.

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._கிருஷ்ணன்&oldid=3220778" இலிருந்து மீள்விக்கப்பட்டது