பிஸ்தா பர்பி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாரசீகத்திலிருந்து இந்தியாவுக்கு வந்த இனிப்பு உணவுகளில் பிஸ்தா பர்பி யும் ஒன்று.

தேவையான பொருட்கள்[தொகு]

(ஆ = ஆழாக்கு; மே = மேஜைக்கரண்டி; தே = தேக்கரண்டி)

பிஸ்தா 1 ஆ.
சர்க்கரை 1/2 ஆ.
தண்ணீர் 1/4 ஆ.
நெய் விழுது 1 மே.

செய்முறை[தொகு]

  • 1. பிஸ்தாவை வாணலியில் வெதுவெதுப்பாய் பிரட்டிக்கொள்ளவும். பின் சற்று ஆறியதும் பொடி செய்து கொள்ளவும்.
  • 2. சர்க்கரையையும் தண்ணீரையும் சேர்த்து அடுப்பில் வைத்து பாகு வைக்கவும். பாகு மித்தல் பதம் வரவேண்டும். மித்தல் பதமென்றால், ஆள்காட்டிவிரலால் தொட்டு, பின் கட்டைவிரலைச் சேர்த்துப் பிரித்துப் பார்த்தால் ஒற்றைக் கம்பி கட்டையாய் வரவேண்டும். அப்பொழுது பிஸ்தா பொடியையும் நெய்யையும் கொட்டிக் கிளறவும். கலவை சுருண்டு வரும்பொழுது துளி எடுத்துப் பார்த்தால் கையால் மணி போல் உருட்ட வரும். அதுதான் சரியான பதம்.
நெய் தடவிய தட்டில் கலவையைக்கொட்டி சமமாய்ப் பரப்பவும். சில நிமிடங்களில் கத்தியால் துண்டங்களாக்கவும்.
  • 3. ஓர் அங்குல கன சதுரமாக 24 கட்டிகள் வரக்கூடியது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஸ்தா_பர்பி&oldid=3420016" இலிருந்து மீள்விக்கப்பட்டது