பிளேக் மருத்துவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1656 ஆம் ஆண்டைச் சேர்ந்த பிளேக் மருத்துவரின் படம்

பிளேக் மருத்துவர் (plague doctor) என்பவர் ஐரோப்பாவின் மத்திய காலங்களில் பிளேக் நோய் உடைய நோயாளிகளை மட்டுமே கவனிப்பதற்கென்று நகரங்களால் நியமிக்கப்பட்ட மருத்துவர் ஆவார். இவர்களுக்கான சம்பளத்தை நகர நிர்வாக‌மே கொடுத்ததால் இவர்கள் பிளேக் நோய் உடைய அனைவருக்கும் மருத்துவம் செய்தனர். குறிப்பாக பணவசதியில்லாத ஏழைகளுக்கு இவர்களின் சேவை அவசியமாய் இருந்தது.

பிளேக் மருத்துவர்கள் பொதுவாக இரண்டாந்தர மருத்துவர்களாகவே கருதப்பட்டனர். மற்றபடி தொழில் நடத்த முடியாதவர்களும் புதிதாக மருத்துவம் படித்து விட்டுத் தொழிலில் இறங்குபவர்களும் மட்டுமே ஆபத்தான இதனை ஏற்றனர்.[1][2] சில சமயம் மருத்துவமே படிக்காத போலிகளும் கூட இத்தொழிலை கைக்கொண்டனர்.

பொது ஊழியர்கள்[தொகு]

பிளேக் மருத்துவர்கள் பொது ஊழியர்கள் ஆவர். இவர்கள் பிளேக் உடைய நோயாளிகளைத் தவிர வேறு எந்த நோயாளிகளையும் பார்க்கக் கூடாது. பிளேக் நோயாளிகளைக் கவனிப்பது மட்டுமின்றி நோயால் மரணமடைந்தோரின் உயில்களை வெளியிடுவதும் மரண ஆவணங்கள் பதிவதும் இவர்களின் பணியாய் இருந்தது.

அலகு மருத்துவர் உடை[தொகு]

முதன்மைக் கட்டுரை: அலகு மருத்துவர் உடை

பிளேக் மருத்துவர்கள் பிளேக் நோயிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வித்தியாசமான ஓர் உடையை அணிந்தனர். இது அலகு மருத்தவர் உடை என்று அறியப்பட்டது.[3] இது கணுக்கால் வரை நீண்ட அங்கி, கையுறை, காலுறை, பூட்சு, தொப்பி மற்றும் ஓர் அலகு முகமூடி இவற்றால் ஆனது. இந்த உடை மட்டுமின்றி இவர்கள் தங்கள் கைகளில் ஒரு குச்சியையும் வைத்திருப்பர்.

புகழ்பெற்ற பிளேக் மருத்துவர்கள்[தொகு]

நாஸ்ட்ராடாமஸ், பாராசெல்சஸ் போன்றோர் புகழ் பெற்ற பிளேக் மருத்துவர்கள் ஆவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ellis, p. 202
  2. Byrne (Daily), p. 169
  3. Irvine Loudon, Western Medicine: An Illustrated History (Oxford, 2001), pp. 184, 189
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளேக்_மருத்துவர்&oldid=2935949" இலிருந்து மீள்விக்கப்பட்டது