பில்லி பௌடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பில்லி பௌடன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிரென்ட் ஃபிரேசர் பௌடன்
பட்டப்பெயர்பில்லி
நடுவராக
தேர்வு நடுவராக61 (2000–நடப்பில்)
ஒநாப நடுவராக143 (1995–நடப்பில்)
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
மூலம்: கிரிக்இன்ஃபோ, சூன் 4 2010

பிரென்ட் பிரேசர் "பில்லி" பௌடன் (Brent Fraser "Billy" Bowden, பிறப்பு ஏப்ரல் 11, 1963) நியூசிலாந்தைச் சேர்ந்த ஓர் பன்னாட்டுத் துடுப்பாட்ட நடுவர். தற்போதைய பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழுவில் இடம் பெற்றுள்ளார். இவரது சுவையான சைகைகளுக்காகப் புகழ்பெற்றவர். துடுப்பாட்டக்காரராக துவங்கிய பில்லி முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட பின்னர் நடுவராகப் பணியாற்றத் தொடங்கினார். முடக்கு வாதத்தால் விரல்களை நேராக நீட்டுவது பெளடனுக்கு மிகுந்த வலியினை உண்டாக்குவதால், மட்டையாளர்களை வெளியேற்ற அவர் தனது நீட்டிய ஆள்காட்டி விரலை பயன்படுத்துவதில்லை. மாறாக குறுகலான விரலையே பயன்படுத்துகிறார். இச்சைகை பார்வையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்லி_பௌடன்&oldid=3221470" இலிருந்து மீள்விக்கப்பட்டது