பிலாவடி கருப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பலா மரத்தடி கருப்புச் சுவாமி கோயில்

பிலாவடிக் கருப்புசாமி விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலின் காவல் தெய்வமே பிலாவடி கருப்பசாமி ஆவார். சுந்தரமகாலிங்கத்தை வணங்கச் செல்ப்வர்கள் முதலில் பழா மரத்தின் அடியில் குடிகொண்டுள்ள கருப்பசாமியை வணங்கி விட்டுத்தான் செல்ல வேண்டும் என்பது நம்பிக்கை.

பலா மரத்தடி கருப்புச்சாமி[தொகு]

இன்றும் சதுரகிரியில் தைலக் கிணறு உள்ளது. கருப்புசாமி தான் கிணற்றுக்கு காவல் தெய்வம் என்கிறார்கள். கிணற்றை ஒட்டி ஒரு பலா மரத்தின் கீழே இவர் சன்னதி அமைந்துள்ளது. எனவே இவர் பிலாவடிக் கருப்பு (பலா மரத்தடிக் கருப்பு) என்று அழைக்கப்படுகிறார். இந்த பலா மரமும் அதிசயமானது தான். ஒரு பலாக்காய் விழுந்தால் தான் அடுத்த காய் காய்க்குமாம்.

பிலாவடி கருப்பு காவல் தெய்வம்[தொகு]

சுந்தர மகாலிங்கமான சிவன் சதுரகிரியில் இருந்து சிறப்பு பெறுவதற்கு காரணம் இந்த பிலாவடி கருப்பு தான் என்கிறார்கள். காவல் தெய்வமான பிலாவடி கருப்பு காவல் செய்யும் பசுக்களின் பாலை சிவன் தினமும் தெரியாமல் குடித்துவிடுவாராம். ஒரு நேரம் கருப்பசாமியிடம் சிவன் சிக்கிக்கொண்டு பிரம்படி பட்டாராம். [சான்று தேவை] பின்னர் பிலாவடி கருப்புக்கு சிவன் தரிசனம் தந்ததனால் பிலாவடிக் கருப்புசாமி சதுரகிரியில் சிறப்பு பெற்றதாக தலவரலாறு கூறுகிறது. பக்தர்கள் நேர்த்திக் கடனாக கொழுத்த ஆட்டுக்கிடாய்களை பலி கொடுக்கும் வழக்கம் இங்கு உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. சதுரகிரி தலபுராணம். ஆர்.சி.மோகன்.


இதனையும் காண்க[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிலாவடி_கருப்பு&oldid=1635923" இருந்து மீள்விக்கப்பட்டது