பிரீடவுன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிரீடவுன் | |
|---|---|
| மத்திய ஃபிரீ டவுனின் தோற்றமும் புகழ்பெற்ற பருத்தி மரமும். | |
| அமைவு: | |
| நாடு | |
| பிரதேசம் | மேற்குப் பிரதேசம் |
| மாவட்டம் | மேற்குப் பிரதேச நகர மாவட்டம் |
| தோற்றம் | மார்ச் 11, 1792 |
| அரசு | |
| - வகை | நகர சபை |
| - மெயர் | Herbert George-Williams (APC) |
| பரப்பளவு | |
| - நகரம் | 137.8 சதுர மைல் (357 கிமீ²) |
| ஏற்றம் | 84 அடி (25.6 மீ) |
| மக்கள் தொகை (2004) | |
| - நகரம் | 7,72,873 |
| நேர வலயம் | Greenwich Mean Time (ஒ.ச.நே.) |
பிரீடவுன் (ஆங்கிலம்: Freetown), சியெரா லியொன் நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். நாட்டின் மேற்குப் பகுதியிலுள்ள இந்நகரம், அத்திலாந்திக் பெருங்கடலில் உள்ள ஒரு முக்கிய துறைமுக நகரம் ஆகும். இது சியெரா லியொனின் பொருளாதார, நிதி, கலாச்சார, கல்வி மையம் ஆகும். நகரின் பொருளாதாரம் அதன் துறைமுகத்தைச் சார்ந்து காணப்படுகின்றது. 2004 ஆம் ஆண்டு மக்கட்டொகைக் கணக்கெடுப்பின் படி நகர மக்கட்டொகை 772,873[1] ஆகும். நகரின் தற்போதைய மக்கட்டொகை 1,070,200 என மதிப்பிடப்பட்டுள்ளது. இது சியெரா லியொன் நாட்டின் மக்கட்டொகையில் ஏறத்தாழ 17% ஆகும். பெரும்பான்மையாக சியெரா லியொன் கிரியோல் மக்களைக் கொண்டிருந்தாலும், இது நாட்டின் அனைத்து இனக் குழுக்களும் கணிசமான அளவில் வாழும் நகரமாக விளங்குகின்றது.