பிராண ஆத்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராண ஆத்மன்

பிராண ஆத்மன் திபெத்திய பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு தர்மபாலர் ஆவார். இவரை திபெத்திய மொழியில் பெக்ட்ஸே என அழைப்பர். இவர் ஹயக்ரீவ தந்திரத்தின் பாதுகாவலராக கருதப்படுகிறார்

தர்மபாலகராக கருதப்படும் இவர், பழங்காலத்தில் போர்க்கடவுளாகவே மத்திய ஆசியாவில் வணங்கப்பட்டுவந்தார். இவர் ஒர் யக்‌ஷனுக்கும் ராட்சசிக்கும் பிறந்ததாக கருதப்படுகிறார். இவர் இன்னும் புத்தநிலை அடையாமல் இருப்பதால் கீழ்நிலை பாதுகாவலராக கருதப்படுகிறார். எனவே ஒரு பௌத்தர் இவரிடம் சரணம் அடைய இயலாது ஆனால் இவரை காவலராக வழிபட முடிய்ம். தர்மத்தை பின்பற்றவர்களை பாதுகாக்கவும் மடங்களை பாதுகாக்கவும் இவரை வழிபடலாம்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராண_ஆத்மன்&oldid=3221195" இலிருந்து மீள்விக்கப்பட்டது