பிரளயம் கண்ட பிதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பிரளயம் கண்ட பிதா என்பது 2001 இல் வெளிவந்த ஒர் இசுலாமியத் தமிழ் குறுங் காப்பிய நூல் ஆகும். இந்த நூல் 17 படலங்களையும், 191 பாடல்களையும் கொண்டது. இதனை கவிஞர் ஜின்னாஹ் ஷரீபுத்தீன் எழுதியுள்ளார்.

இக் காப்பியம் யூத-கிறித்தவ-இசுலாமிய சமய நூல்களில் இடம்பெறும் நோவா அல்லது நூஹ் (அலை) அவர்களின் கதையைக் கூறுகிறது. "இவரது காலத்தில் இறைமறுப்பாளர்களை வெள்ளப் பிரளயத்தின் - ஊழிப் பெருவெள்ளத்தின் வழியாக இறைவன் தண்டித்தான். நூஹ் நபியையும் அவர்களைப் பின்பற்றியவர்களையும் உயிரினங்களில் ஒவ்வொரு இணைகளையும் இறை ஆணைப்படி அவர் அமைத்த கப்பலில் ஏறித் தப்பினார்கள்" என்பது நூஹ்வாவின் கதைச் சுருக்கம்.[1]

இந்த நூல் பற்றிய மதிப்புரையில் முனைவர் தக்கலை எம். எஸ். பஷீர் "கவிஞர் ஜின்னாஹ்வின் இக் குறுங்காப்பியம் (கதையியம்) எளிமை, இனிமை நிறைந்தது. செந்தமிழ்ச் சொற்களில் படிப்போருக்குக் கலக்கமின்றிப் புரியுமாறு தெளிவுறப் பொருட் சுவையைத் தருமாறு அமைந்துள்ளது" என்று கூறியுள்ளார்.[1]

எடுத்துக்காட்டுப் பாடல்[தொகு]

கொலைக்களவு வழிப்பறியும் பொய்யும் சூதும்
கூறவிய லதாபடி மலிந்தே போக
விலைமாதர் தொகை பெருமி அந்நாள் மக்கள்
விபசாராயலைந்தார் நீதிநேர்மை
தொலைதூரம் ஒழிந்தோடிப் போனதாலே
துணிவுபலம் உள்ளவர்கள் பிறரை ஏய்த்தார்
சிலைகளெங்கும் கடவுளராய்த் தோன்றி ஏக
தெய்வசிந்தை அற்றுமக்கள் திசைகெட்ட்டாரே (33)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 எம். எஸ். பஷீர். (2005). இக்கால இஸ்லாமிய தமிழ்க் காப்பியங்கள். சென்னை: சந்தியா பதிப்பகம்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரளயம்_கண்ட_பிதா&oldid=1642046" இலிருந்து மீள்விக்கப்பட்டது