பிரம்மரிஷி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிஷிகளுக்கேல்லாம் ரிஷி என்பவரை மகரிஷி என்றழைப்பர். மகரிஷிகளுக்கெல்லாம் ரிஷி என்பவரை பிரம்மரிஷி என்பர். வேதங்களின் படி எவர் ஒருவர் பிரம்மஞானம் பெற்றவராக கருதப்படுகிராரோ, அவரே பிரம்மரிஷி என்ற பட்டத்துடன் அழைக்கப் படுவார். இதுவரை பிருகு, அத்திரி, அங்கரிசர் , காச்யபர், விசுவாமித்ரர், வசிஷ்டர், சாண்டில்யர் ஆகிய எழு ரிஷிகள் மட்டுமே. பிரம்மரிஷி பட்டம் பெற்றுள்ளனர். இதில் விசுவாமித்ரர் மட்டும் சத்ரிய குளத்தில் தோன்றி தன் தவ வலிமையால் பிரம்மரிஷி பட்டம் பெற்றார். பிரம்மரிஷிகளுக்கு தேவர்களுக்கு நிகரான சக்தி இருப்பதாகவும் வேதங்கள் கூறுகின்றன.