பிரமிள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரமீள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தர்மு சிவராம் (பிரமிள்)

பிரமிள் (ஏப்ரல் 20, 1939 - ஜனவரி 6, 1997) என்ற பெயரில் எழுதிய தருமு சிவராம், இலங்கையில் பிறந்தவர். தமிழகத்து எழுத்தாளர். பாரதி, புதுமைப்பித்தனுக்குப் பிறகு தோன்றிய ஒரு இலக்கிய மேதை. தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர்.புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார். இவர் பானுசந்திரன், அரூப் சீவராம், பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார். அடிக்கடி தம் பெயரை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தவர். ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலையைச் சேர்ந்தவர். எழுபதுகளின் ஆரம்பத்திலேயே தமிழ்நாடு வந்து விட்டார். பிறகு தம் பெரும்பாலான வாழ்நாளைச் சென்னையிலேயே கழித்தார்.

எழுத்துலகில்[தொகு]

சி.சு.செல்லப்பாவின் எழுத்து பத்திரிகையில், தமது இருபதாவது வயதில் எழுதத் துவங்கிய பிரமிள், நவீன தமிழ்க் கவிதையுலகில் தனி அடையாளம் கொண்டவர். ஓவியம், சிற்பம், நாடகம், மொழியாக்கம், விமர்சனக்கட்டுரைகள் என விரிந்த தளங்களில் இயங்கிய பிரமிள், நவீன தமிழ் இலக்கியம் குறித்துக் கூர்மையான விமர்சனமும் அவதானிப்பும் கொண்டவர்.

ஆரம்பக் கல்வி மட்டும் ராமகிருஷ்ணமடம் நடத்திய இரவுப்பாடசாலையில் கிடைத்தது. தமிழின் மாமேதை என்று தி.ஜானகிராமனாலும், உரைநடையின் அதிகபட்ச சாத்தியத்தை நிறைவேற்றியவர் என்று சி.சு.செல்லப்பாவாலும் பாராட்டப்பட்டவர் பிரமிள். இளம் வயதிலேயே மெளனியின் கதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதிய பெருமை இவருக்குண்டு.

"கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்" என்ற தலைப்பில் பாரதியை மதிப்பீடு செய்து மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை எழுத்துவில் எழுதினார். மைசூரிலிருந்து வெளிவரும் ஆங்கிலப் பத்திரிகை, கேரளக் கருத்தரங்கில் படித்த தமிழ்க்கவிதை பற்றிய இவரது கட்டுரை ஒன்றைக் கேட்டு வாங்கி வெளியிட்டது.

படைப்புகள்[தொகு]

கவிதைத் தொகுதிகள்[தொகு]

  • கண்ணாடியுள்ளிருந்து
  • கைப்பிடியளவு கடல்
  • மேல்நோக்கிய பயணம்
  • பிரமிள் கவிதைகள்

சிறுகதை தொகுப்பு[தொகு]

  • லங்காபுரி ராஜா
  • பிரமிள் படைப்புகள்

சிறுகதைகள் சில[தொகு]

  • காடன் கண்டது
  • பாறை
  • நீலம்
  • கோடரி
  • கருடனூர் ரிப்போர்ட்
  • சந்திப்பு
  • அசரீரி
  • சாமுண்டி
  • அங்குலிமாலா
  • கிசுகிசு

குறுநாவல்[தொகு]

  • ஆயி
  • பிரசன்னம்
  • லங்காபுரிராஜா

நாடகம்[தொகு]

  • நட்சத்ரவாசி

பிரமிள் நூல் வரிசை[தொகு]

(பதிப்பு : கால சுப்ரமணியம்)
1. பிரமிள் கவிதைகள். 1998. (முழுத் தொகுதி). (லயம்).
2. தியானதாரா. 1989 (லயம்), 2005 (ஆகாஷ்), (1999), (2006), 2008 (கவிதா).
3. மார்க்சும் மார்க்ஸீயமும். 1999. பீட்டர் வோர்ஸ்லி. (லயம்).
4. பிரமிள் படைப்புகள். 2003. (அடையாளம்).
5. வானமற்றவெளி: கவிதை பற்றிய கட்டுரைகள்.2004. (அடையாளம்).
6. பாதையில்லாப் பயணம்: ஆன்மீக-மறைமுகஞானப் படைப்புகள். 2007. (வம்சி).
7. பிரமிள் கவிதைகள். 2007. (சிறப்புப் பதிப்பு). (அடையாளம்).
8. விடுதலையும் கலாச்சாரமும்: மொழிபெயர்ப்புப் படைப்புகள். 2009. (விருட்சம்)
9. சிறீலங்காவின் தேசியத் தற்கொலை. 2009. (தமிழோசை).
10. யாழ் கதைகள். 2009. (லயம்).
11. காலவெளிக் கதை: அறிவியல் கட்டுரைகள். 2009. (உள்ளுறை).
12. வெயிலும் நிழலும்: இலக்கிய விமர்சனக் கட்டுரைகள். 2011. (வம்சி).
13. வரலாற்றுச் சலனங்கள்: சமுதாயவியல் கட்டுரைகள். 2011. (வம்சி).
14. எதிர்ப்புச்சுவடுகள்: பேட்டிகள், உரையாடல்கள்.
15. அறைகூவல்: இலக்கிய அரசியல் எழுத்துகள்.
16. தமிழின் நவீனத்துவம்: எழுத்து கட்டுரைகள். 2011. (நற்றிணை)
17. சூரியன் தகித்த நிறம் (மொழிபெயர்ப்புக் கவிதைகள். 2011. (நற்றிணை)
18. பிரமிள்: இலக்கியப் படைப்புகள். 2012. (நற்றிணை)
19. பிரமிள்: விமர்சனப் படைப்புகள்-1. 2012. (நற்றிணை)
20. பிரமிள்: விமர்சனப் படைப்புகள்-2. 2012. (நற்றிணை)
21. பிரமிள்: பிற படைப்புகள். 2012. (நற்றிணை)

விருதுகள்[தொகு]

நியூயார்க் விளக்கு அமைப்பு "புதுமைப்பித்தன்" விருதை இவருக்கு அளித்தது. கும்பகோணம் சிலிக்குயில் "புதுமைப்பித்தன் வீறு" வழங்கியது.

மறைவு[தொகு]

உதரவிதானத்தில் ஏற்பட்ட புற்றுநோயால் பக்கவாதத்தால் உடல் செயலிழந்து, மூளையில் பாதிப்பு ஏற்பட்டு, பக்கவாதத்தால் உடல் செயலிழந்து, பல மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர், 1997ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி காலமானார். வேலுருக்கு அருகிலுள்ள கரடிக்குடி என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பிரமிள்&oldid=1100396" இருந்து மீள்விக்கப்பட்டது