பிரண்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிரண்டை | ||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| Cissus quadrangularis L. |
||||||||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||||||||
|
Cissus quadrangula |
சோழவந்தான் அருகே முள்வேலியில்
பிரண்டை (Cissus quadrangularis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும். இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. முழுக்கொடியும் மருத்துவப் பயன்பாடுடையதாகும்.
பொருளடக்கம் |
[தொகு] பிரண்டைச் செடி
நீர்ப்பற்றான இதன் தண்டு (கொடி) நான்கு பக்க விளிம்பு கொண்டது. பூக்கள் வெள்ளை நிறமானவை; பழம் கறுப்பு நிறமானதாகும்.
[தொகு] பிரண்டையின் பயன்பாடு
- பிரண்டையைக் கொண்டு சட்டினி மற்றும் வடகம் செய்யலாம்.
- இந்துக்களின் மரண நல்லடக்கங்களில் சவக்குழியில் பிரண்டை நடப்படுகிறது.
[தொகு] மருத்துவ பயன்பாடுகள்
இதனை உணவில் சேர்த்துவர மூலநோய், மலச்சிக்கல், வயிற்றெரிவு, குடற்புண் என்பன நீங்கும். செரியாமை, சுவையின்மை நீங்கிப் பசியுண்டாகும்.
வஜ்ஜிரவல்லிச் சூரணம் செய்யப் பயன்படுகிறது.
[தொகு] உசாத்துணை
- மூலிகைகள் - ஓர் அறிமுகம் - சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா