பியெரி பெர்தியர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பியெரி பெர்தியர் | |
|---|---|
![]() பியெரி பெர்தியர் |
|
| பிறப்பு | ஜூலை 3, 1782 |
| இறப்பு | ஆகஸ்ட் 24, 1861 |
| தேசியம் | பிரான்சு |
| துறை | புவியியல் |
| பணி நிறுவனம் | École des Mines |
| கல்வி கற்ற இடங்கள் | École Polytechnique |
| அறியப்படுவது | பாக்சைட் |
பியெரி பெர்தியர் ( Pierre Berthier: ஜூலை 3, 1782- ஆகஸ்ட் 24, 1861) பிரான்சு நாட்டுப் புவியியலாளர் மற்றும் சுரங்கப்பொறியாளர். பிரான்சின் தெற்குப் பகுதியில் உள்ள லெஸ்-பாக்ஸ்-டி-புரொவென்சி எனும் கிராமத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த போது அங்கு கிடைக்கப்பெற்ற ஒரு கனிமத்தைக் கண்டறிந்து, அதற்கு அவ்வூரின் பெயரான பாக்சைட் (Bauxite) பெயரிட்டார். இதிலுள்ள உலோகம் அலுமினியம் எனக் கண்டறிந்து அதனைப் பிரித்தெடுத்தார்.[1]மேலும் இவர் பெர்தியரைட் என இவர் பெயரால் அழைக்கப்படும் கனிமத்தையும் கண்டறிந்தார். பெர்தியர் பிரான்சு அறிவியல் கழகத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரான்சு நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது பெர்தியருக்கு வழங்கப்பட்டது
மேற்கோள்[தொகு]
- ↑ ஆர். வேங்கடராமன்,முழுமை அறிவியல் உலகம்', பக். 3607
