பியூட்டேன்
பியூட்டேன் என்பது நான்கு கரிம அணுக்கள் கொண்ட, கிளைவிடாத ஆல்க்கேன் வகையைச் சேர்ந்த ஹைட்ரோ கார்பன் (கரிம நீரதைப்) பொருள் ஆகும். இதனை n-பியூட்டேன் என்றும் அழைப்பர். 10 ஹைட்ரஜன் அணுக்கள் கொண்ட இதன் வேதியியல் சமன்பாடு C4H10 ஆகும். இதனை கீழ்க்காணுமாறு பிரித்தெழுதுவது வழக்கம் CH3CH2CH2CH3. இது நிறமற்ற வளிம நிலையில் உள்ள ஒரு பொருள். மிக எளிதாகத் தீப்பிடிக்க வல்லது. இதனை எளிதாக நீர்ம நிலைக்கு மாற்ற முடியும்.
அதிக அளவில் ஆக்ஸிஜன் இருக்கும்பொழுது நன்றாக எரிந்து கார்பன்-டை-ஆக்சைடும் (கரிம ஈராக்சைடும்) நீரும் விளைபொருளாய்த் தரக்கூடியது. ஆனால் அதிக அளவில் ஆக்ஸிஜன் இல்லையெனில், விளைபொருட்களில், கரிப்புகையும் (soot), கார்பன் -மோனாக்சைடும் (கரிம ஓராக்சைடு) தரவல்லது.
| ஆல்க்கேன்கள் | |||||||||||||||||||||||||||||||
|
மெத்தேன் |
| |
எத்தேன் |
| |
புரொப்பேன் |
| |
பியூட்டேன் |
| |
பென்ட்டேன் |
| |
ஹெக்சேன் |
|||||||||||||||||||||
|
ஹெப்ட்டேன் |
| |
ஆக்டேன் |
| |
நோனேன் |
| |
டெக்கேன் |
| |
ஆண்டெக்கேன் |
| |
டோடெக்கேன் |
|
||||||||||||||||||||