பித்துக்குளி முருகதாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Pithukuli.jpg

பித்துக்குளி முருகதாஸ் (Piththukkuli Murugadas, பி. 25 சனவரி 1920) பித்துக்குளி முருகதாஸ் பரவசமூட்டும் பக்திப் பாடல்கள் பாடுபவர். உலகின் பல நாடுகளுக்குச் சென்று பக்திப் பாடல் இசைக் கச்சேரிகள் செய்தவர்[1].

பிறப்பு[தொகு]

பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட முருகதாஸ் 1920 ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் நாள் (சித்தார்த்தி வருடம், தைப்பூச திருநாளில்) கோவையில் சுந்தரம் ஐயர், அலமேலு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். தாத்தா அரியூர் கோபாலகிருஷ்ண பாகவதர் (உஞ்சவிருத்தி பஜனை வித்வான்), பாட்டி ருக்மணியம்மாள். இளம் வயது பாலசுப்ரமணியனுக்கு பக்திப் பாடல்களை சொல்லிக் கொடுத்தவர் பாட்டிதான். சகோதரி செல்லம்மாள், சகோதரர் கோபாலகிருஷ்ணன்.

பக்தி வழி[தொகு]

1936 ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் இரமண மகரிஷியை சந்தித்தாராம் "திருவண்ணாமலையில் ரமணரை முதன்முதலா சந்தித்தபோதே, அவர் முகத்துல இருந்த தேஜசும் ஒளியும் என்னைக் கட்டிப்போட்டது. இவர்தாண்டா உன்னோட குரு; கெட்டியா பிடிச்சுக்கோன்னு மனசு சொன்னதை அப்படியே ஏத்துக்கிட்டேன்."[2] என்று தான் பக்தி வழிக்கு வந்த விதத்தை அவரே சொல்கிறார்.

தென் ஆபிரிக்கா, இலங்கை, ஐக்கிய அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு, ரீயூனியன், ஆத்திரேலியா ஆகிய நாடுகளில் பக்தி இசைக் கச்சேரிகள் செய்திருக்கிறார்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகள் தெரிந்தவர்.

1940 ஆம் ஆண்டு இறுதியில் (இ)ரிசிகேசம் முதலான வடநாட்டுத் தலங்களுக்கு பாத யாத்திரை சென்றார்.

பாடிய பிரபல பக்திப் பாடல்கள்[தொகு]

திரைப்பட பக்திப் பாடல்கள்[தொகு]

விருதுகள்[தொகு]

  • சங்கீத சாம்ராட் - 1956 இல் சுவாமி சிவானந்தரால் வழங்கப்பட்டது[4]
  • கலைமாமணி - 1984 இல் எம்.ஜி.ஆரால் வழங்கப்பட்டது
  • குரு சுராஜானந்தா விருது 1989 இல்
  • மதுர கான மாமணி - 1994 இல் இலண்டனில்
  • சங்கீத நாடக அகாடமி விருது 1998 இல்
  • தியாகராஜர் விருது - தில்லி தான்சேன் விழாவில்
  • தலைசிறந்த இசை தேவர் - சே செல்லீசு நாட்டில் வழங்கப்பட்டது.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. "Combining bhakti and service". THE HINDU. பார்த்த நாள் 30 நவம்பர் 2013.
  2. சிறப்பு விருந்தினர் பக்கம் - பித்துக்குளி முருகதாஸ்
  3. "தெய்வம் (1972)". மாலைச்சுடர். பார்த்த நாள் 30 நவம்பர் 2013.
  4. Profile of Piththukuli Murugadas

வெளி இணைப்புகள்[தொகு]

ஆன்மீக யாத்ரீகர் நாதயோகி பித்துக்குளி முருகதாஸ்